- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களை அப்படி சந்தோஷப்படுத்துவார், நடிகர் விஜய் மாதிரி மற்ற ஹீரோக்கள் இல்லையே? ஆதங்கப்பட்டு பேசிய முன்னணி...

எங்களை அப்படி சந்தோஷப்படுத்துவார், நடிகர் விஜய் மாதிரி மற்ற ஹீரோக்கள் இல்லையே? ஆதங்கப்பட்டு பேசிய முன்னணி தயாரிப்பாளர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஏனென்றால் உச்ச நடிகராக இருந்தும் நட்சத்திர நடிகராக ஜொலித்தாலும் நடிகர் விஜய் தொழிலில் தன் பணிகளை செவ்வனே செய்பவர் என்று பலராலும் இதுவரை பாராட்டப்படுபவராக இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் உள்ளிட்ட யாருக்குமே எவ்வித இடையூறும் செய்ய மாட்டார். சமீபத்தில் பேசிய நடிகர் ஷ்யாம், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் மொபைல் போனை பயன்படுத்த மாட்டார். பிரேக் டைமில்தான் அதை கையில் எடுப்பார். நாம சம்பளம் வாங்கிட்டு நடிக்க வந்திருக்கிறோம். தொழிலில் கவனமா இருக்கணும் என்று என்னிடம் கூறுவார் என்று நடிகர் ஷ்யாம் வெளிப்படையாக கூறியிருந்தார்.

- Advertisement -

அதே போல் ஜனநாயகன் படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடந்தது. அப்போது வாகனம் செல்ல வசதியில்லாத மலைப்பகுதியில் போக வர 6 கிலோ மீட்டர் நடிகர் விஜய் நடந்தே சென்றிருக்கிறார். இதுகுறித்து படக்குழுவினரிடம் அவர் எந்த சங்கடத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஒரு உச்ச நடிகர் இப்படி எல்லாம் அனுசரித்து நடந்துக்கொள்வது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நடிகர் விஜய் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று அறிவித்துவிட்டார். ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். அரசியல்வாதியாக விஜய் களத்தில் இறங்கியது சந்தோஷம் என்றாலும் சினிமாவில் அவர் தொடர்ந்து நடிக்க மாட்டார் என்பது சினிமா துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியதாவது, நடிகர் விஜய் கால்ஷீட்டை சரியாக கொடுப்பார். அவரது கொள்கை ஒரு படத்துக்கு 6 மாதங்கள் தருவார். ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் படப்பிடிப்பு என கலந்துக்கொள்வார். இதனால் படம் 6 மாதங்களில் முடிக்கப்படும்.

ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட சந்தோசம் எதுவும் இருக்காது. நடிகர் விஜயின் இந்த ரூல்ஸை மற்ற ஹீரோக்களும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். ஆனால் தெலுங்கு சினிமாவில் இது சீர்குழைந்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தில்ராஜூ வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்