இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில். இந்த படத்தில்தான் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நான் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன், அந்த இசை வம்சத்தை சேர்ந்தவன் என்பதை தனது இசையால் நிரூபித்து காட்டினார்.
வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. படமும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பாடல் காட்சிகளும் இசையும் பசுபதி பரத் ஜிஎம் குமார் போன்றவர்களின் நடிப்பும் வெயில் படத்தை வேற லெவல் வெற்றிப் படமாக மாற்றியது.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த ஜீவி பிரகாஷ்குமார் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். அவர் நடித்த நாச்சியார் ஜெயில் குப்பத்து ராஜா பென்சில் திரிஷா இல்லேனா நயன்தாரா சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
ஒருபுறம் இசையமைப்பாளராகவும் மறுபுறம் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்த ஜீவி பிரகாஷ்குமார் குடும்ப வாழ்வில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். பாடகி சைந்தவியிடம் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே தோழியாக அவரிடம் பழகி பிறகு காதலித்து ஜீவி பிரகாஷ்குமார் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜீவி பிரகாஷ்குமார் நடித்த கிங்ஸ்டன் படம் வெளியானது. இது இவரது 25வது படமாகும். இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கிய இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கதை திரைக்கதையில் சுவாரசியம் இல்லாததால் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 7ம் தேதி வெளியான கிங்ஸ்டன் படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் முதல் நாளில் ரூ. 90 லட்சம் வசூலானது. இதுவரை 4.5 கோடி வரை மட்டுமே வசூலான நிலையில் படம் பிளாப் ஆகி விட்டது. வழக்கமாக பெரும்பாலான தமிழ் நடிகர்களுக்கு 25வது படம் 50வது படம் 100வது படம் என்றாலே, தோல்வி படம் சென்டிமென்ட் தானாகவே அமைந்து விடும். அந்த வரிசையில் ஜீவி பிரகாஷ்குமாருக்கும் அந்த சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகி விட்டதே என்று அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.





