இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் 2 பாகங்களிலும் நடிகை திரிஷா குந்தவை கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு தோழியாக சோபிதா துலிபாலா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு அவர் ஜோடியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் அதிக படங்களில் நடிக்காத சோபிதா துலிபாலா இந்தியில் நிறைய படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். ஜி2 த பாடி ஜிக்ரா கோஸ்ட் ஸ்டோரீஸ் மூதூன் மேஜர் என பல படங்களை சொல்லலாம். எனினும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்த வானதி கேரக்டர் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அடையாளத்தை தந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை நடிகை சோபிதா துலிபாலா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஏற்கனவே நாக சைதன்யா திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்ற நிலையில் அவர் 2ம் தாரமாக சோபிதா துலிபாலாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இது இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது.
கடந்த 2017ம் ஆண்டில் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 4 ஆண்டுகள் மட்டுமே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்த நிலையில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நாக சைதன்யா சமந்தா பிரிவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்களது பிரிவுக்கு முக்கிய காரணம், நடிகை சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததுதான் என்றும் கூறப்பட்டது. அதனால்தான் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா 2வது திருமணம் செய்துள்ள நிலையில், அவரும் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு வேட்டுவம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சோபிதா துலிபாலா நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதில் கெத்து தினேஷ் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் நிலையில் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது உறுதியாகவில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு பிறகு நடிக்க வருவதால் சமந்தா போல இவருக்கும் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்பட்டு விடுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.





