சினிமா நடிகர், நடிகைகளை பொருத்தவரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அடையாளமும் அபிமானமும் பெற்று விடுகின்றனர். சினிமாவில் அவர்களது நடிப்பை பார்த்து, அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது மனதில் அங்கீகாரம் தந்து விடுகின்றனர். அவர்களது படங்களை காண தீவிர ஆர்வம் ரசிகர்கள் காட்டுகின்றனர்.
ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்களது குணங்களும், செயல்களும், அவர்களது திரைநடிப்புக்கு எதிரானதாக, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களது செயல்பாடுகள், முற்றிலும் வேறுபட்டதாக இருப்பது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை சில வேளைகளில் ஏற்படுத்தி விடுகிறது.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் லிங்கா. இதில் அப்பாவாக நடித்த ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹாவும், மகனாக நடித்த ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்றாலும், சோனாக்ஷி சின்ஹா நடிப்பு இந்த படத்தில் சிறப்பாக இருந்தது.
சோனாக்ஷி சின்ஹா, இந்தியில் பிரபல நடிகரான சத்ருஹன் சின்ஹா மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சத்ருஹன் சின்ஹா இந்தியில் பல வெற்றிப் படங்களை தந்து, முன்னணி கதாநாயகனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, எம்பி ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சோனாக்ஷி சின்ஹா, ஜாகிர் இக்பால் என்பவரை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் திருமணத்துக்கும் தயாராகி விட்டனர். அவர்கள் இருவரும் டபுள் எக்ஸ்எல் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலாகி இப்போது திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களது திருமணம் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா, அது உங்களுக்கு தேவை இல்லாதது, என ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் கோபமாக பதில் தந்திருக்கிறார். இதுகுறித்து அவரது அப்பா சத்ருஹன் சின்ஹாவிடம் கேட்ட போது, அப்படியா, அவருக்கு திருமணமா? எனக்கு தெரியாதே, சோனாக்ஷி திருமணம் செய்தால் நான் கண்டிப்பாக ஆசிர்வாதம் செய்வேன், என்று கூறியிருக்கிறார். அப்பாவுக்கு கூட தெரியாமல் மகள் திருமணம் செய்கிறாரா, என பாலிவுட் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.





