- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங்கின்போது புகைப்பிடித்த செல்வராகவனின் மனைவி, அட்வைஸ் செய்த இயக்குனரை விரட்டி அடித்த சம்பவம்

ஷூட்டிங்கின்போது புகைப்பிடித்த செல்வராகவனின் மனைவி, அட்வைஸ் செய்த இயக்குனரை விரட்டி அடித்த சம்பவம்

- Advertisement -

செல்வராகவன் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர். அவர் இயக்கிய “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன்” ஆகிய திரைப்படங்கள் இப்போதும் மாற்று சினிமா ஆர்வலர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக இருக்கிறது. சமீப காலமாக செல்வராகவன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். “ஆயிரத்தில் ஒருவன்”, “புதுப்பேட்டை” ஆகிய திரைப்பங்களின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இது குறித்த எந்த தகவலும் செல்வராகவனிடம் இருந்து வெளிவரவில்லை. இதில் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரே வெளிவந்தது. 2024 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிக முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார் செல்வராகவன்.

செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே பல கருத்து மோதல்கள் நிலவ 2010 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், சோனியா அகர்வால் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது சோனியா அகர்வால் திருமணம் செய்த பிறகு சில நாட்களில் செல்வராகவனின் நடவடிக்கைகளில் விருப்பம் இல்லாமல் போனதாம். ஆதலால் கமுக்கமாக இருவரும் விவாகரத்து பெற்றனர் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன்,

சோனியா அகர்வாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் இருக்கிறதாம். நமது குடும்பத்திற்கு இந்த பழக்கம் ஒத்துவராது என்று செல்வராகவன் அவரிடம் அறிவுரை கூறியபோது, “கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே நான் சிகரெட் பிடிப்பேன். இப்ப என்ன புதுசா குறை சொல்லிக்கிட்டு இருக்க” என்று சண்டை போட்டாராம். அதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டாராம்.

மேலும் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் சோனியா அகர்வால் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது அத்திரைப்படத்தின் இயக்குனர், “ஏம்மா இப்படி சிக்ரெட் பிடிக்கிற?” என கேட்டாராம். அதற்கு சோனியா அகர்வால், “என் காசுல நான் சிக்ரெட் பிடிக்கிறேன். உன் காசுலயா நான் சிகரெட் பிடிக்கிறேன். போடா” என்று துரத்தி விட்டார் எனவும் பயிவான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சற்று முன்