- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரரைப் போற்று இயக்குனரை படாதபாடு படுத்தும் பயோ பிக் நடிகர், ஏன்ப்பா இப்படி பண்றீங்க?

சூரரைப் போற்று இயக்குனரை படாதபாடு படுத்தும் பயோ பிக் நடிகர், ஏன்ப்பா இப்படி பண்றீங்க?

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி உட்பட பலரது நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் “சூரரைப் போற்று”. சூர்யாவின் கெரியரில் பல ஆண்டுகள் கழித்து திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் இது. இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்தது.

இவ்வாறு மிகப் பெரிய வரவேற்பை பெற்ற “சூரரைப் போற்று” திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யத் தொடங்கினார் சுதா கொங்கரா. இந்த ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்க சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக மும்முரமாக சென்றுகொண்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்து Post Production பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் அக்சய் குமாரோ இந்த படத்தை அடுத்த வருடம் வெளியிடலாம் என்று கூறிவிட்டாராம். அதாவது அக்சய் குமாருக்கு “சூரரைப் போற்று” ரீமோக் போக மேலும் மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறதாம்.

ஆதலால் அந்த மூன்று திரைப்படங்களையும் இந்த ஆண்டு வெளியிட்டுவிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு “சூரரைப் போற்று” ஹிந்தி ரீமேக்கை தள்ளிவைத்துவிடலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் இத்திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியில் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சற்று முன்