- Advertisement -
நடிகர் கே பாக்யராஜ் நடிகை ரூபிணி நடிப்பில் சார் ஐ லவ் யூ என்ற படம் தொடங்கப்பட்டது ஆனால் ஷூட்டிங் நடந்த சில நாட்களிலேயே அந்த படம் கைவிடப்பட்டது. பள்ளி ஆசிரியரை அதே பள்ளியில் படிக்கும் மாணவி காதலிப்பதும் மாணவியின் காதலை ஆசிரியர் ஏற்க மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது தான் அந்த படத்தின் கதை. பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே கதையை சுந்தரகாண்டம் என்ற பெயரில் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா தனது மகள் பெயரில் சரண்யா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்தார். இதில் ஆசிரியர் கேரக்டரில் பாக்யராஜூம் மாணவியாக சிந்துஜாவும் ஆசிரியரின் மாணவியாக பானுப்பிரியாவும் நடித்தனர். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக தமிழக அரசின் சிறந்த கதை ஆசிரியர் விருது பாக்யராஜூக்கு கிடைத்தது.





