- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் வெற்றிமாறனுடன் கைக்கோர்க்கும் சூரி, ஆனால் இயக்குனர் அவரு கிடையாதாம், வேற யார்ன்னு தெரியுமா? ஒரு...

மீண்டும் வெற்றிமாறனுடன் கைக்கோர்க்கும் சூரி, ஆனால் இயக்குனர் அவரு கிடையாதாம், வேற யார்ன்னு தெரியுமா? ஒரு ஆச்சரிய தகவல்

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்தின் மூலம் சூரி ஒரு கதாநாயகனாக அறிமுகமானார். அந்த கதைக்கு ஏற்றார் போல் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார் சூரி. அவரின் நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் “விடுதலை” இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சூரியை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

- Advertisement -

அதாவது சூரி மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளாராம். ஆனால் அந்த திரைப்படத்திற்கு வெற்றிமாறன் இயக்குனர் கிடையாதாம். வெற்றிமாறன் அத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளாராம்.

வெற்றிமாறன் தயாரிப்பில் சூரி நடிக்க அத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்க உள்ளாராம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

லிங்குசாமி சமீபத்தில் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் இயக்கிய “வேட்டை” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் அதன் பின் அவர் இயக்கிய “அஞ்சான்” திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை அடைந்தது. மேலும் இணையத்தில் பலரும் அத்திரைப்படத்தை கேலி செய்யத்தொடங்கினர்.

“அஞ்சான்” திரைப்படத்தை தொடர்ந்து “சண்டக்கோழி 2” திரைப்படத்தை இயக்கினார் லிங்குசாமி. இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் அவர் தெலுங்கில் இயக்கிய “தி வாரியர்” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்த நிலையில்தான் லிங்குசாமி சூரியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அத்திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வருகிறது. இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்