- Advertisement -
Homeபொழுதுபோக்குஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் எப்படி உள்ளது... இதோ...

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் எப்படி உள்ளது… இதோ வந்தாச்சு முதல் ரிவ்யூ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் பல்வேறு இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சிதான், இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கும் வெளிச்சத்தை பாய்ச்சியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரை உலகிற்கு வந்த அஜய் ஞானமுத்து, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இடம் உதவியாளராக பணிபுரிந்தார்.

 

- Advertisement -

ஏழாம் அறிவு மற்றும் துப்பாக்கி என இரண்டு திரைப்படங்களிலும் அவர் முருகதாஸின் கீழ் வேலை பார்த்தார். இங்கிருந்து தனது முதல் படத்தை எடுக்க துடித்தவருக்கு, டிமான்டி காலனி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹாரர் திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதில் டிமான்டி காலனி தனி முத்திரை பதிப்பதாய் அமைந்தது.

 

- Advertisement -

இதற்கு முக்கியமான காரணம் படத்தின் எழுதப்பட்ட திறமையான திரைக்கதை தான். குறிப்பாக இதன் இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகள், ஒரு அறைக்குள் நிகழும் சம்பவங்களாகவே இருக்கும். ஆனால் அது ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் சலிப்பூட்டும் வகையில் இல்லாதவாறு காட்சிப்படுத்தி இருப்பார் அஜய் ஞானமுத்து.

 

சொல்லப்போனால் கடைசி 30 நிமிடங்கள் நாம் இருக்கையின் நுணுக்கி சென்றிருப்போம். அந்த அளவு அந்தத் திரைப்படம் பதற்றமாகவும் பரபரப்பாகவும் இருந்திருக்கும். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியின் மூலம் அடுத்ததாக, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து.

 

நயன்தாரா விஜய் சேதுபதி அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்றது. படத்தின் நீளமே அதன் மீது விமர்சனத்தை எடுத்து வைக்க ஏதுவாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் விக்ரமை வைத்து இயக்கிய கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் தான் தற்போது டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து எடுத்திருக்கிறார்.

 

இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் அருள்நிதி மரணமடைவது போன்று காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதன் நீட்சியாகவே இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தை மலேசியாவில் வெளியிடும் விநியோகஸ்தர் ஒருவர் அதனை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். இப்படி ஒரு ஹாரர் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் நான் இரண்டு மணி நேரம் செல்போனை தொடவே இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையைத்தான் இந்தியா முழுவதும் பேசும் என்றும் அவர் பாராட்டி இருக்கிறார். இதன் காரணமாக படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

- Advertisement -

சற்று முன்