- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் சூரி... இதில் அந்த ஒரு விஷயம் தான் இருக்கிறதுலேயே ஹைலைட்...

லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் சூரி… இதில் அந்த ஒரு விஷயம் தான் இருக்கிறதுலேயே ஹைலைட்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து பின்னர் கதாநாயகனாக உயர்ந்தவர் சூரி. இவரை ஹீரோ அந்தஸ்திற்கு முதன் முதலில் உயர்த்தியது இயக்குனர் வெற்றிமாறன்தான். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தை, சூரி கதாபாத்திரத்தை வைத்தே நகர்த்தி இருந்தார் வெற்றிமாறன். குமரேசன் என்னும் காவலர் ரோலில் சூரி வாழ்ந்தார்.

படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை சூரியின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்படி ஒரு நடிப்பை வைத்துக் கொண்டா இவ்வளவு நாள் அவர் நகைச்சுவை படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்று பலரும் கேள்வி கேட்கும் அளவுக்கு அதில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இவரைத் தொடர்ந்து அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்தது கொட்டுக்காளி திரைப்படம்.

- Advertisement -

இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படவில்லை என்றாலும், திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் பாராட்டை பெற்றது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில், மிக அருமையாக நடித்து நம்மை பயமுறுத்தினார் சூரி. இதனைத் தொடர்ந்து கருடன் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கியிருந்த இந்த திரைப்படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதில் சூரிக்கும் ஆக்சன் ஹீரோவாக மாறும் ஸ்கோப் நிறைய இருந்தது. இதனை மிகச் சரியாக அவர் பயன்படுத்திக் கொண்டார். பிறகு அவரது நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது. ராஜ்கிரண் விஜி சுவாசிகா ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு சூரியே கதை எழுதி இருந்தார். அக்கா தம்பிக்கு இடையேயான பாசமும், திருமணம் முடிந்தவுடன் அந்த உறவில் ஏற்படும் விரிசலும், மாமன் மருமகனுக்கு இடையேயான உறவையும் மிக அழுத்தமாக அந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர். இப்படி, தான் நடித்த திரைப்படங்களில் எல்லாம் வெற்றி பெற்று வரும் சூரி, தற்போது மண்டாடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூரி. மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவர் ஜல்லிக்கட்டு என்னும் தரமான திரைப்படத்தை கொடுத்ததால், இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு எடுத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்