- Advertisement -
Homeபொழுதுபோக்குஅசத்தலாக வந்திருக்கும் சூரியின் மாமன் பட ட்ரெய்லர்... அப்புறம் என்ன... குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ஒரு...

அசத்தலாக வந்திருக்கும் சூரியின் மாமன் பட ட்ரெய்லர்… அப்புறம் என்ன… குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ஒரு பார்சல்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகனாக மாறியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சந்தானம் மற்றும் சூரி. இதில் சந்தானம் ஹீரோவாக மாறினாலும் தொடர்ந்து நகைச்சுவை சார்ந்த திரைப்படங்களையே கையில் எடுத்து வருகிறார். இது அவருக்கு பிளஸ் ஆகவே அமைந்திருக்கிறது என்று கூறலாம். சந்தானம் திரைப்படம் என்றால் அதில் காமெடி உறுதி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு நேர் மாறாக தற்போது தனது பயணத்தில் சென்று கொண்டிருக்கிறார் சூரி. வெறும் பழைய காமெடியையே சூரி கொடுத்துக் கொண்டிருப்பதாக பலரும் விமர்சித்து வந்த சூழலில், அவருக்கு விடுதலை திரைப்படத்தின் மூலம் மிக கனமான கதாபாத்திரத்தை கொடுத்து கவனிக்க வைத்தார் வெற்றிமாறன்.

- Advertisement -

அதில் குமரேசன் என்னும் காவலர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் சூரி. அதிலும் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அதனை சுமந்து செல்லும் கதாபாத்திரமாக தான் சூரி இருப்பார். இத்தனை நாளாக காமெடியனாக பார்த்திருந்த சூரியை அந்த ஒரு திரைப்படத்திலேயே மிக மாறுபட்ட கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் அதனை ஏற்றும் கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து தனது நடிப்பிற்கு பறைசாற்றும் விதமாக அடுத்ததாக சூரியின் நடிப்பில் வெளியானது கொட்டு காளி திரைப்படம். பி எஸ் வினோத்குமார் இயக்கியிருந்த அந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பாராட்டை பெற்றது. அதில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் மிரட்ட வைத்திருந்தார் சூரி.

- Advertisement -

தொடர்ந்து கருடன் திரைப்படம் வெளியாகி சூரிக்கு வரவேற்பை கொடுத்தது. கமர்சியல் ரீதியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதன் இலக்கை சரியாக அடைந்தது என்றே கூறலாம். இப்படியான சூழலில் தற்போது மாமன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சூரி. விலங்கு வெப் சீரிசை எடுத்த பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ராஜ்கிரண், லப்பர் பந்து சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கிறார்கள். மாமனுக்கும் மருமகனுக்கும் இடையேயான உறவை தான் இந்த திரைப்படம் கூறுகிறது. வரும் 16ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், அதற்கான ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. படம் குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டு இருப்பதும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் அதன் ட்ரைலரை பார்க்கும்போதே தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்