- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம், மீண்டும் வெள்ளித்திரையில் கேப்டன்...

கோட் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம், மீண்டும் வெள்ளித்திரையில் கேப்டன் விஜயகாந்த் – எவ்வளவு நேரம் எப்படி வருகிறார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சரித்திர நாயகனாக கொண்டாடப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். துவக்கத்தில் சாதாரண நடிகராக வாழ்க்கையை துவங்கிய விஜயகாந்த் , பிறகு நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்து படிப்படியாக உயர்ந்தார். பிறகு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில், முன்னேறிய கேப்டன் பல ஹிட் படங்களை கொடுத்தார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், சங்கத்தின் கடனை முற்றிலுமாக அடைத்து 1.75 கோடி ரூபாய் சங்கத்தில் இருப்பாகவும் வைத்தார். சிவாஜி கணேசன் மறைவின் போது, இறுதி ஊர்வலத்தில் தனி ஒரு மனிதராக களத்தில் இறங்கி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தினார்.

- Advertisement -

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளின் போது, ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதிகளை பல லட்சம் ரூபாய் தந்தார். எப்போதும் உதவி என வருபவர்களுக்கு வாரி வழங்கினார். சினிமா சார்ந்தவர்களின் பல பிரச்னைகளை முன்னின்று தீர்த்து வைத்தார்.

கடந்த 2005ம் ஆண்டில் தேமுதிக கட்சியை துவங்கிய கேப்டன் விஜயகாந்த், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார், சட்டசபை எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டில் டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது மறைவால் தமிழகமே சோகத்தில், வேதனையில் மூழ்கியது. இறுதி ஊர்வலத்தில் 15 லட்சம் பேர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், மறைந்த கேப்டனுக்கு மரியாதை செய்யும் விதமாக, இயக்குனர் வெங்கட்பிரபுவும், செந்தூரபாண்டியில் தனக்கு அண்ணனாக நடித்து தனது வளர்ச்சிக்கு பேருதவி செய்த கேப்டனுக்கு நன்றி சொல்லும் விதமாக விஜயும், கோட் படத்தில் விஜயகாந்த் நடித்த காட்சிகளை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்துள்ளனர். அந்த காட்சிகளை பார்த்து கேப்டன் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் அசந்து போய் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

கோட் படத்தில், இரண்டரை நிமிடங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருக்கிறார். திரையில் தோன்றி பேசுகிறார். அதாவது படத்தின் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக திரையில் தோன்றும் அவர், கதையில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் வருகிறார். அவரது பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பான ஓட்டத்தில் மிக முக்கிய பங்காக இருக்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளது. ஆக, கேப்டனின் நடிப்பு கோட் படத்தில் வேற லெவலில் ரசிகர்களை அசத்தப்போவது உறுதி என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்