தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி இப்போது பிற ஹீரோ நடிகர்கள் நடிக்கும் படங்களை இயக்கவும் செய்கிறார். நானும் ரவுடிதான், எல்கேஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ், ஜில் ஜங்க் ஜக், தேவி, சலூன் போன்ற பல படங்களில் ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த ஆர்ஜே பாலாஜி படங்களில் நடிப்பது மட்டுமின்றி, கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளை தனக்கே உரித்தான நான்ஸ்டாப் பாணியில் அவர் வர்ணனையாளராக மூச்சு விடாமல் படபட என ஜாலியாக பேசுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நாயகனாக ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி அசத்தினார். அவரது நடிப்பில் அடுத்து சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் 45 வது படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
இந்த படத்தின் கதையை ஏற்கனவே நடிகர் விஜயிடம் ஆர்ஜே பாலாஜியால் சொல்லப்பட்டு, அவர் தனது 69வது படத்தின் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஆர்ஜே பாலாஜி சொன்ன கதை விஜய்க்கு பிடித்த போதிலும், இந்த கதையில் நான் நடித்ததால் நன்றாக இருக்காது என்று விஜய் மறுத்து விட்டதால் இப்போது அந்த கதையில், நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்கிறார்.
தற்போது ஆர் ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் என்ற புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றது. இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் கதையை இயக்குனருடன் தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.
மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999ம் ஆண்டில் நடக்கும் கதையாக சொர்க்கவாசல் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் செல்வராகவன் கருணாஸ் பாலாஜி சக்திவேல் எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிற 29ம் தேதி சொர்க்கவாசல் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





