தமிழ் சினிமாவில் 51 ஆண்டுகளை கடந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போது ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து தர்மன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு ரஜினிகாந்த் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா மற்றும் கெஸ்ட் ரோலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மிதுன் சக்ரவர்த்தி நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஜெயிலர் படத்தை போலவே ஜெயிலர் 2 படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த படத்திலும் வன்முறை சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் முதல் தமிழ் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். இதில் தனது குழந்தை பருவம் இளமை பருவம் சினிமாவில் அறிமுகமான ஆரம்பகால கட்டம் சினிமாவில் நடிகராக ஜெயித்தது உச்ச நட்சத்திரமாக மாறியது குடும்ப வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை அரசியல் தொடர்பு என பல தகவல்களையும் வெளிப்படையாக எழுதி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, என்னுடைய அப்பாவின் சுயசரிதையை ஒரு பகவத் கீதையை போல இராமாயணம் போல மகாபாரதம் போலவே நான் பார்க்கிறேன். முதலில் அவர் அதை எழுதி முடித்து அது புத்தகமாக வெளிவரட்டும்.
அதற்கு பின் என் அப்பாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரிஸ் ஆக எடுக்கலாம் என்று அந்த நேர்காணலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மேலும் ராகவேந்திரா திருமண மண்டபம் இனி புதிதாக மாற்றப்படும். காலத்துக்கு ஏற்ப அப்பா மாற வேண்டும் என்பார். அதன்படி இந்த திருமண மண்டபமும் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.





