- Advertisement -
ஒருமுறை கூட்டத்தில் பேசிய தமிழ்கடல் நெல்லை கண்ணன் கூறியதாவது, செங்கல்பட்டு பக்கத்துல ஒரு கிராமம். நாங்க எல்லாம் கார்ல போயிட்டு இருந்த போது அங்கு வயல்ல நட்டுக்கிட்ட இருந்த பெண்களை பார்த்ததும் எம்ஜிஆர் காரில் இருந்து இறங்கி போய் அவங்ககிட்ட பேசினார். அப்போ அவர்களுக்கு எம்ஜிஆர் பணம் கொடுத்தார். அப்போ அங்கு இருந்த ஒரு கிழவன், நீ ரொம்ப நாள் நல்லா இருந்தா அதுவே போதும்யா. பணம் எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அப்புறம் காருக்குள் வந்து அமர்ந்துக்கொண்டு எம்ஜிஆர் கண்கலங்கி அழுதார். இந்த ஏழை ஜனங்க எல்லாம் என்னை இப்படி என் மீது பாசம் வைத்து நம்பறாங்களே? இவங்களுக்கு என்ன செய்யப் போகிறேன்? என்று நெகிழ்ந்து போய் பேசினார் என்று நெல்லை கண்ணன் கூறியிருக்கிறார்.





