- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படம் மதியம் 12 மணிக்கு தான் ரிலீஸ்? சிறப்பு காட்சி குறித்து மௌனம் சாதிக்கும்...

விடாமுயற்சி படம் மதியம் 12 மணிக்கு தான் ரிலீஸ்? சிறப்பு காட்சி குறித்து மௌனம் சாதிக்கும் தமிழக அரசு – துணிவு படம் சம்பவம்தான் காரணமா?

- Advertisement -

முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸாகும் போதும் பொங்கல் தீபாவளி போன்ற விசேஷ நாட்களின் போதும் சிறப்பு காட்சிகள் நடத்திக்கொள்ள தியேட்டர் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. முன்பெல்லாம் அதிகாலை 4 மணி, காலை 7 மணி, காலை 10 மணி என அந்த நாளில் 5 முதல் 7 காட்சிகள் வரை புதிய படங்கள் திரையிட சிறப்பு அனுமதி வழங்கியது.

சில நேரங்களில் அடுத்த 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை இப்படி சிறப்பு காட்சிகள் நடத்திக்கொள்ளவும் அரசு அனுமதித்தது. ஏனெனில் பண்டிகை காலத்தில் சினிமா பார்த்து ரசிக்கும் பொதுமக்களுக்காகவும் இந்த அனுமதி தரப்பட்டது. இது விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கணிசமான லாபத்தை கொடுத்தது.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் அஜீத்குமார் நடித்த துணிவு படம் வெளியான போது, அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி பார்க்க ரசிகர்கள் கூட்டம், ஆட்டம் போட்டது. சென்னையில் ஒரு தியேட்டர் முன்பு கொண்டாட்டம் போட்ட ரசிகர் கூட்டம், அங்கிருந்த லாரி ஒன்றின் மீது ஏறி ஆடியது. அதில் தவறி விழுந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு சுதாரிக்கொண்ட தமிழக அரசு, அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுத்தது. படம் ரிலீஸான அன்று மட்டும் 5 காட்சிகள் நடத்திக் கொள்ளவும் காலை 9 மணிக்கு முதல் காட்சியை சிறப்பு காட்சியாக நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியது. இப்போது அதுதான் நடைமுறையிலும் இருந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ரஜினி கமல் விஜய் விஜய் சேதுபதி சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்குகிறது. மேலும் ஆந்திராவில் புஷ்பா 2 படம் பிரிமிஷர் ஷோவில் நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த நிலையில், அங்கு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த நடவடிக்கை அவசியம் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 6ம் தேதி, அஜீத்குமார் திரிஷா நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. இதுவரை ப்ரீ புக்கிங் டிக்கெட் பதிவு நடந்து வரும் நிலையில், மதியம் 12 மணிக்கு காட்சிக்கு தான் அனுமதிக்கப்படுகிறது. இன்னும் தமிழக அரசு காலை 9 மணி காட்சிக்கு அனுமதி தராமல் மவுனமாக இருந்து வருகிறது. ஏற்கனவே துணிவு பட சிறப்பு காட்சி சம்பவம் காரணமாக, இந்த முறை 9 மணி சிறப்பு காட்சி நடக்குமா என்பதே ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்