நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து, குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அஜித்குமாரை பொறுத்த வரை, தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர், வயதுக்கேற்ற நடிகையை நடிக்க வைக்குமாறு, இவற்றை கவனமாக தனது படத்தில் இருக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் சில வயதான நடிகர்கள், இளம் நடிகைகளுடன் நடிப்பதும், அவர்களது கேரக்டருக்கு, வயதுக்கு பொருந்தாத கேரக்டரில் நடிப்பதும் ரசிகர்கள் பார்வையில் கிண்டலாக போய்விடுகிறது.
உதாரணமாக லிங்கா படத்தில் நடித்த போது, ரஜினிகாந்த் படத்தின் ஆரம்ப காட்சிகளில் மிக இளைஞராக தன்னை காட்டிக்கொண்டதைப் பார்த்து, அவரது ரசிகர்களே வயிறு குலுங்க சிரித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அந்த படத்தில் கதாநாயகி அனுஷ்கா. ரஜினிகாந்த் வயதுக்கு, அனுஷ்கா அழகுக்கு ஏணி வைத்தாலும் எட்டாது என்ற நிலையில், ரஜினிகாந்துக்கு அனுஷ்கா ஜோடியா என்று படம் பார்த்தவர்கள், தலையில் அடித்துக் கொண்டனர்.
அதுபோல் மிக இளமையான அழகான நடிகையை, தங்களது படங்களில் கதாநாயகர்கள் நடிக்க வைப்பது, அந்த படத்தையே டேமேஜ் செய்து கதையை சொதப்பும் நிலையை ஏற்படுத்தும் என்பதை, அஜித்குமார் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். ஏனெனில் மரத்துக்குப் பின்னால் ஜோடியாக நடனமாடும் காதல் ஜோடியாக அந்தந்த வயதில் உள்ள இளம் நடிகர், நடிகையர் நடித்தால் தான் அது ரசிகர்களால் ரசிக்க முடியும்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் குட்பேட் அக்லி படத்தில் குண்டூர்காரம் படத்தில் நடித்த நாயகி ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஆனால் அவர் அதில் அஜீத்குமாருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறாரா, அல்லது படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் அந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இப்போது புதிய தகவலாக, விஜய் நடித்த கோட் படத்தில் ஒரு குத்தாட்டம் பாடலுக்காக ஸ்ரீ லீலாவை வெங்கட் பிரபு அழைத்துள்ளார். ஆனால் அப்போதுதான் குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலா நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அதனால் அஜித் படம்தான் முக்கியம். விஜய் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவது முக்கியமில்லை என்று ஸ்ரீலீலா மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் கோட் படத்தில் விஜயுடன் குத்தாட்டம் போட நடிகை திரிஷா வரவழைக்கப்பட்டு, செம கெமிஸ்ட்ரியுடன் இருவரும் ஜோடி போட்டு ஆடியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது





