- Advertisement -
Homeபொழுதுபோக்குஉடம்பு எப்பவும் பிட்னஸ் ஆக இருக்கணும்னா அதை மட்டும் செய்யாதீங்க - நான் அதை செய்வதே...

உடம்பு எப்பவும் பிட்னஸ் ஆக இருக்கணும்னா அதை மட்டும் செய்யாதீங்க – நான் அதை செய்வதே இல்லை என்று சொன்ன ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன்!

- Advertisement -

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரை முடியும் என்கிற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சினிமா நடிகர் நடிகைகளுக்கு 100 சதவீதம் நிச்சயமாக பொருந்தும். ஏனென்றால் அழகான தோற்றத்தில் திரையில் தோன்றும் வரை தான் நடிகைகள் தொடர்ந்து நடிக்க முடியும். கம்பீரமான தோற்றத்தில் நடிக்கும் வரை தான் ஹீரோக்களாக நடிகர்கள் நடிப்பை தொடர முடியும்.

இப்போது 75 வயது தொட்ட ரஜினிகாந்தும் 70 வயது கடந்த கமல்ஹாசனும் ஒன்றாக இணைந்து நெல்சன் இயக்கத்தில் நடிப்பது அவர்களது ஆரோக்கியமான உடல் நலமும் கம்பீரம் சற்றும் குலையாத தோற்றமும்தான். இதுவே தொப்பை சரிந்து கன்னத்தில் சதை தொங்கி முகம் மாறி இருந்தால் இருவருமே இப்படி ஒரு மாஸ் ஆன கெட்டப்பில் நடிக்க முடியாது.

இந்த வயதிலும் ஹீரோக்களாக வலம் வர அந்த கெத்தான லுக்கில் அவர்கள் இப்போதும் இருப்பது தான் முக்கிய காரணமாகும். அதே போல் நடிகை திரிஷா நடிகை நயன்தாரா போன்றவர்களும் 40 வயதுகளை கடந்தும் நாயகிகளாக வலம் வருகின்றனர். அதே போல் பல நடிகர்கள் நடிகைகள் வயதான நிலையிலும் தங்களது உடல் தோற்றத்தை செம லுக் ஆக வைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் இப்போது 62 வயதிலும் இளமையான தோற்றத்தில் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் காணப்படுகிறார். இப்போதும் கல்லூரி மாணவர் போல அவர் தென்படுகிறார். தனது இளமை குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, நான் ஸ்பெஷலாக எந்த உணவும் சாப்பிட மாட்டேன். வீட்டில் என்ன இருக்கிறதோ அதை தான் சாப்பிடுவேன்.

ஆனால் நான் ஓட்டலில் பெரும்பாலும் சாப்பிட மாட்டேன். என் பசங்க மட்டும்தான் சாப்பிடுவாங்க. முடிந்த அளவுக்கு ஓட்டலில் சாப்பிடுவதை நான் கண்டிப்பாக தவிர்த்து விடுவேன். வீட்டில் கொஞ்சம் சாதமும் சாம்பாரும் இருக்கிறது என்றால் அதுவே போதும் என்று கூறி விடுவேன். முட்டை இருந்தால் ஒரு ஆம்லெட் மட்டும் போட்டு கொடுங்க என்று எளிமையாக என் உணவை முடித்துக் கொள்வேன்.

இப்படி நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டும் நல்ல ஆரோக்கியமாக இருக்கலாம். அதுக்கு அடிப்படை என்னவென்றால் நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே உடற்பயிற்சி எல்லாம் செய்து அஸ்திவாரத்தை பலமாக போடணும். பிற்காலத்தில் நீங்க சாதாரணமான உணவு சாப்பிட்டால் கூட ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஓட்டலில் சாப்பிடாமல் தவிர்ப்பதே தன் பிட்னஸ் ரகசியம் என்று அர்ஜூன் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்