- Advertisement -
திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை பர்சேஸ் செய்யப் போகிறோம் என்று வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்கு பணம் போதாமல் தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா? என்று மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கி விட்டன. அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுக்குள் வைக்க தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலை உயரவே இல்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யை கேட்டுதான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.





