சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக மின்னியவர்கள், அதன் பின் குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு ஹீரோயினாக ஜொலிக்கத் தொடங்கி விடுவார்கள். மீனாவில் இருந்து அனிகா சுரேந்திரன் வரை இதற்கு உதாரணமாக கூறலாம்.
ஆனால் சென்ற வருடம் சின்ன பெண்ணாக பார்த்த நடிகை ஒருவர் திடீரென ஹீரோயின் ஆகியிருப்பது ஆச்சரியத்தை தந்துள்ளது. அவர் யார் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு திரிஷா முன்னணி கதாநாயகியாக நடித்து வெளிவந்த திரைப்படம் “ராங்கி”. இத்திரைப்படத்தை எம்.சரவணன் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இத்திரைப்படத்தின் கதையை எழுதியிருந்தார்.
எனினும் இத்திரைப்படம் சரியாக போகவில்லை. இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அனஸ்வரா ராஜன் என்பவர் நடித்திருந்தார். இவர் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “7ஜி ரெயின்போ காலனி” பார்ட் 2 திரைப்படத்தில் அனஸ்வரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் அனஸ்வரா. கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் “7ஜி ரெயின்போ காலனி”.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து சமீப நாட்களாக இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான பேச்சுக்கள் அடிப்பட்டு வந்தன. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளனவாம். இத்திரைப்படத்தையும் செல்வராகவனே இயக்க ரவி கிருஷ்ணாவே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் ஹீரோயினாக அனஸ்வரா நடிக்கிறார்.
“ராங்கி” திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்திருந்தாலும் அத்திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பே படமாக்கப்பட்டது. மிகவும் தாமதமாகத்தான் வெளியானது. ஆதலால் அதில் சிறு பெண்ணாக தெரிந்திருந்தார் அனஸ்வரா. ஆனால் தற்போது அவருக்கு 20 வயது நிரம்பியுள்ளது.





