நடிகர் சிம்புவுக்கு கடந்த ஆண்டு பத்து தல திரைப்படம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸ் செய்யப்பட்ட அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏ ஆர் ரகுமான் இசையில் அந்த திரைப்படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன.
இந்த திரைப்படத்திற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வெங்கட் பிரபுவின் அட்டகாசமான திரைக்கதையில், டைம் லுக் கதையை கையில் எடுத்து அதனை எந்தவித குழப்பமும் இல்லாமல் காட்சிப்படுத்தியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இப்படியான சூழலில் கடந்த ஆண்டு பத்து தல திரைப்படத்திற்கு பிறகு சிம்பு எந்த திரைப்படத்திலும் கமிட்டாகவே இல்லை. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதிய திரைப்படத்தில் சிம்பு கமிட்டானார். அவரின் 48வது திரைப்படமாக இது எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த தேசிங்கு பெரியசாமி தான் இந்த திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்தை வைத்து ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்தார். ஆனால் அது ரஜினிகாந்தை பெரிய அளவில் தவறவில்லை என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் சூப்பர் ஸ்டாருக்கு எடுத்து ஸ்கிரிப்ட்டை தான் எஸ்டிஆர்-ஐ வைத்து அவர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியான போதும், கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேல் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமலேயே இருந்தன.
இதனால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இப்படியான சூழலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஷூட்டிங் பணிகள் தொடங்கின. இதில் நடிகர் சிம்பு இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வேடம் பெண் நளினம் கலந்த கதாபாத்திரத்தில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





