இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 படத்துக்கு பிறகு 12 ஆண்டுகளாக தியேட்டரிக்கல் மூலம் பெரிய வெற்றிப் படம் இல்லாமல் தவித்து வந்த நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து சூப்பர் கம்பேக் தந்தது. இந்த படம் ரூ. 340 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா மமீதா பைஜூ ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் இரண்டுமே பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
அடுத்ததாக இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது மூன்றாவது படத்தையும் திரைக்கு கொண்டுவர நடிகர் சூர்யா தயாராகி வருகிறார். மலையாள சினிமாவில் நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தை இயக்கியவர் ஜித்து மாதவன். அவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஸ்லன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இதற்கிடையே சூர்யா 47 படம் குறித்து முக்கியமான லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தில் நடிகர் சூர்யா பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒரு வழக்கை விசாரிக்கும் போது அவர் தனது பார்வையை இழக்கிறார் என்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவரும் அந்த வழக்கை அவர் விசாரிப்பதே படத்தின் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு கதைக்களம் ரசிகர்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இது உண்மையான தகவலா அல்லது வெறும் வதந்தியா என்பதை வரும் நாட்கள் தான் உறுதி செய்யும். அதே நேரத்தில் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக சூர்யா நடிப்பது நிச்சயமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். ஏற்கனவே பார்வையற்ற கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே தனது100வது படம் ராஜபார்வை என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனால் இந்த படம் சூர்யாவுக்கு ஒரு பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





