- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அறிவித்த கட்சி பெயரிலேயே இவ்வளவு பிழைகளா, ஆரம்பமே இத்தனை சொதப்பலா? - வெளுத்து வாங்கிய...

விஜய் அறிவித்த கட்சி பெயரிலேயே இவ்வளவு பிழைகளா, ஆரம்பமே இத்தனை சொதப்பலா? – வெளுத்து வாங்கிய பிரபலம்

- Advertisement -

நடிகர் விஜய் நேற்று திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்க இருப்பதாகவும், அதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணபித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மேலும், கடந்த வாரத்தில் விஜய் மக்கள் இயக்கம் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்ததாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்ட விவரங்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

மேலும் இன்றைய அரசியலில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும் சாதி, மதம் பெயர்களால் மக்களை பிளவுபடுத்தும் சதி திட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் அவற்றை களைந்து, சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும், மக்களுக்கு நல்லாட்சி வழங்கவும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சி துவங்குவதாகவும் விஜய் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த அறிக்கையில் தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என ‘க்’ அதில் சேர்க்கப்படாதது பெரிய பிழை என தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் பலரும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிடக் கூடாது என ஏற்கனவே மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு வெற்றிக்கழகம் என்றுதான் விஜய் கட்சி பெயரை அறிவித்திருக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றி கழகம் என்பதை விட இன்னும் நல்ல பெயராக கட்சிக்கு வைத்திருக்கலாம். இதற்காக புஸ்லி ஆனந்த் தலைமையில் குழு அமைத்து 50 பெயர்களை எழுதி விஜயிடம் தந்துள்ளனர். அதில் அவர் தேர்வு செய்தது இந்த சுமாரான பெயர்தான். அப்போது மீதி 49 பெயர்கள் இதை விட மிக மிக சுமாராக தான் இருந்திருக்கும்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலும், வழக்கமான அரசியல்வாதிகளின் டெம்ப்ளேட்தான் தெரிகிறது. புதிதாக எதுவுமில்லை. பிராக்டிக்கலான அரசியலை அவர் பேசவில்லை. அரசியலில் சாதியை ஒழிப்பதாக அவர் கூறியதெல்லாம் சாத்தியமே இல்லை. ஏனெனில், இங்கே அரசியலில்தான் சாதிதான் முக்கிய ரோலாக இருந்து வருகிறது, என்றும் கூறியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

- Advertisement -

சற்று முன்