- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்காவில் இருந்து நடிகர் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும், நடக்கப் போகும் தரமான சம்பவம் - ஏற்பாடுகளை...

அமெரிக்காவில் இருந்து நடிகர் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும், நடக்கப் போகும் தரமான சம்பவம் – ஏற்பாடுகளை துரிதப்படுத்தும் அமரன் படக்குழு!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை இயக்கியிருந்தார். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவியும் நடித்திருந்தனர். அமரன் படம் முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அமரன் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்பே தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அமரன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தனர். அவர்களுடன் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரும் இருந்தனர். அமரன் படத்தை முதல்வர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டி இருந்தார்.

அதே போல் அமரன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, குறிப்பாக நாயகியாக நடித்த சாய்பல்லவி ஆகியோரை பாராட்டினார்கள். அமரன் படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி என்ற வசூலை கடந்து சாதனை படைத்தது.

- Advertisement -

தொடர்ந்து தீபாவளி பண்டிகை ரிலீஸ் படங்களில் பிரதர், பிளடி பெக்கர் படங்கள் தோல்வியடைந்த நிலையில், அமரன் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இதற்கிடையே வெளியான சூர்யா நடித்த கங்குவா படமும் தோல்வியை தழுவியதால் தொடர்ந்து அமரன் படம் திரையரங்குகளில் 3 வது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அமரன் படம் உலகளவில் ரூ. 310 கோடி, தமிழ்நாட்டில் ரூ. 150 கோடி என்ற வசூலை கடந்த நிலையில், அமரன் படத்தின் வெற்றிவிழா நடத்த படக்குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் திரும்பியவுடன் இந்த விழா நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, படக்குழுவினருக்கு கேடயங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்