- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடித்த கவுண்டமணி படம் - ஷூட்டிங் முடிஞ்சாச்சு - மறுபடியும் இந்த...

பிரபல நடிகர்களின் வாரிசுகள் நடித்த கவுண்டமணி படம் – ஷூட்டிங் முடிஞ்சாச்சு – மறுபடியும் இந்த படத்துல கவுண்டமணி அரசியல் பேசறாரோ?

- Advertisement -

நடிகர் கவுண்டமணி, 80 வயதுகளை கடந்து விட்டார். அவர் நடிக்க வந்த போதே 40 வயதுகளை கடந்தவர் என்று கூறப்பட்டவர். 16 வயதினிலே படத்தில், பரட்டையன் என்கிற ரஜினியுடன் இருப்பார். பத்த வெச்சுட்டியே பரட்டை என்ற டயலாக் மட்டுமே பேசி, அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்றவர். பாரதிராஜா கவுண்டமணியை வேண்டாம் என மறுத்தும், உதவி இயக்குநர் கே பாக்யராஜ் கட்டாயத்தால், கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படத்தில், பெட்டிக்கடை டெயிலர் காளியண்ணன் கேரக்டரில், கவுண்டமணி நடித்திருப்பார். சரோஜா குப்பை கொட்றியா, கொட்டு கொட்டு என்று வசனம் பேசியிருப்பார். இப்போதும் அந்த காட்சிகளை பலரும் ரசித்து ரசித்து யூடியூப்களில் ரசிக்கின்றனர். கைய புடிச்சு இழுத்தா வராத பொம்பள, கண்ணடிச்சா மட்டும் வந்திடவா போறா, என இன்னொரு புறம், கள்ளாப்பட்டி சிங்காரம் பாக்யராஜ் அப்பாவாக இந்த படத்தில் அதகளம் செய்திருப்பார்.

இப்படி ஆரம்பித்த கவுண்டமணி திரைப்பயணம், பின்னர் படிப்படியாக உயர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், சரத்குமார், விஜய், சிம்பு வரை கதாநாயகர்களுடன் இணை காமெடி நாயகனாக நடித்து அசத்தினார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உச்சத்தை தொட்டார். குறிப்பாக கவுண்டமணி, சத்யராஜ் இணை, காமெடியில் சம்பவமாக இருக்கும். இதுதவிர கவுண்டமணி செந்தில் கூட்டணி, அமோக வரவேற்பை பெற்றது.

நடிகர் கவுண்டமணி வயது முதுமை காரணமாக, கடந்த 10, 15 ஆண்டுகளாக அதிகமாக சினிமாவில் நடிப்பதில்லை. ஆனால் அப்போதும் ரசிகர்கள் தன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது ஒரிரு படங்களில் நடிக்கவே செய்கிறார். 49 ஓ என்ற படத்தில், தேர்தல் குறித்து பேசினார். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்திலும் கவுண்டமணி ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில், கவுண்டமணி நடித்திருக்கிறார். இந்த படத்தை சாய் ராஜகோபால் டைரக்ட் செய்துள்ளார். இவரும் நடிகர்தான். கிச்சா வயசு 16, சுந்தரி நீயும், சுந்தரன் நானும் என்ற படங்களை ஏற்கனவே இயக்கியவர். சசி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அரசியல், நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு, ராஜேஸ்வரி, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அத்துடன் முக்கிய கேரக்டர்களில் பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ், சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் மயில்சாமி மகன் அன்பு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

சற்று முன்