- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தில் அஜீத்துக்கு அஜீத்தே வில்லனாக மாறி விட்டாரா? என்னப்பு இப்படி சொல்லிட்டீங்க? எல்லாம் ஆதிக்...

இந்த விஷயத்தில் அஜீத்துக்கு அஜீத்தே வில்லனாக மாறி விட்டாரா? என்னப்பு இப்படி சொல்லிட்டீங்க? எல்லாம் ஆதிக் ரவிச்சந்திரன் கையில்தான் இருக்குது!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டராக வலம் வருகிறார். ஆனால் அவரது படங்கள் சில நேரங்களில் அதிக இடைவெளியில் பல மாதங்கள் கழித்து வருவது ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்கிறது. ரஜினியும் ஒரு கட்டத்தில் இப்படி 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் இடைவெளி விட்டார். ஆனால் இப்போது தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜீத்குமார் படங்கள் அதிக இடைவெளி ஏற்பட முக்கிய காரணம், அவர் கதையை தேர்ந்தெடுக்க அதிக காலம் அவகாசம் எடுத்துக் கொள்வதுதான். சில நேரங்களில் கதைகளை கேட்டு முடிவெடுக்கவும் அதிக நாட்கள் எடுத்துக்கொள்கிறார். அதிலும் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளதால் கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்றவற்றுக்கும் அடிக்கடி சென்றுவிடுகிறார்.

இப்போது விடாமுயற்சி குட்பேட் அக்லி என 2 படங்களில் அஜீத்குமார் நடித்து முடித்துள்ள நிலையில் விடாமுயற்சி படம் வெளியாகி விட்டது. அடுத்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட குட் பேட் அக்லி படம், வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று அஜீத்குமார் பிறந்த நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

துபாயை தொடர்ந்து இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடந்துவரும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று உள்ளார். வருகிற அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் பந்தயங்களில் அஜீத்குமார் பங்கேற்க உள்ளார். அதனால் அக்டோர் மாதத்துக்கு பிறகுதான் அவரது அடுத்த படம் ஏகே 64 குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இதற்கிடையே அஜீத்குமார் திரிஷா அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்த விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வசூல் ரீதியாக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை தயாரிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விடாமுயற்சி படத்தின் நஷ்டம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து வர உள்ள குட் பேட் அக்லி படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ஏனென்றால் ஒரு நடிகரின் படம் பிளாப் ஆகும் பட்சத்தில் அடுத்து வெளியாகும் அவரது படத்தை அதிக விலைக்கு வாங்க வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் முன்வர மாட்டார்கள். அதனால் எதிர்பார்த்த வியாபாரம் நடக்காது. படம் வெளியாகி நல்ல பாசிட்டிவ் ரிசல்ட் இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். அதனால் விடாமுயற்சி அஜீத்குமார், குட்பேட் அக்லி அஜீத்குமாருக்கு வில்லனாக மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். ஆனால் இதில் உண்மையான வில்லன் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனிதான் என்றும் ஏகே ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்