- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாருக்கு மட்டுமல்ல, ஜெயிலரில் பணியாற்றிய ஊழியர்களையும் சூப்பராக கவனித்த தயாரிப்பு நிறுவனம்... என்ன இத்தனை...

சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமல்ல, ஜெயிலரில் பணியாற்றிய ஊழியர்களையும் சூப்பராக கவனித்த தயாரிப்பு நிறுவனம்… என்ன இத்தனை பரிசுகளாக என ரசிகர்கள் ஆச்சரியம்…

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தர்பார், அண்ணாத்த தோல்வி திரைப்படங்களால் துவண்டு இருந்த ரஜினிகாந்த்திற்கும், பீஸ்ட் படத்தால் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட நெல்சனுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது.

படம் ரிலீசான சமயத்தில் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், ரஜினிக்கு உண்டான மாஸ் காட்சிகளால் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் ஜெயிலுக்கு வர ஆரம்பித்தார்கள். முதல் பாதியில் முழுக்க முழுக்க ரஜினிக்கு தெறியான காட்சிகளை வைத்து அசத்தியிருந்தார் நெல்சன். ஒரு பேன் பாயாகவே அவர் செயல்பட்டிருப்பதாக பலரும் கூறினர்.

- Advertisement -

இரண்டாம் பாதியில் கதை சம்பந்தமே இல்லாமல் வேறொரு திசைக்கு சென்றாலும், அவ்வப்போது மாஸ் காட்சிகளை நெல்சன் தூவி விட்டதால் படம் பலருக்கும் பிடித்துப் போனது. குறிப்பாக, கன்னட பிரபலம் சிவராஜ் குமார், மலையாள பிரபலம் மோகன்லால் ஆகியோரை சரியான இடத்தில் பயன்படுத்தி இருந்தார் நெல்சன்.

கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் வந்து போன இடங்கள், ரசிகர்களை புல்லரிக்கச் செய்தது. இதனால், தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் ஜெயிலரின் வசூல் சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் அளவுக்கு ஜெயிலர் படம் வசூல் ஈட்டி உள்ளது.

- Advertisement -

இதனால் மகிழ்ச்சியில் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினிகாந்துக்கு பிஎம்டபிள்யூ உயர்ரக சொகுசு காரை பரிசாக வழங்கியது. இதேபோல், இயக்குனர் நெல்சனுக்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கிய அனிருத்திற்கு பரிசு இல்லையா என அனைவரும் கேள்வி கேட்கத் தொடங்க, அவருக்கும் காரை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியது தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் இன்று ஜெயிலர் படத்தில் சக்சஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும், இரண்டு கிராம் தங்க காயினை பரிசாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று பிரியாணி விருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதால் தயாரிப்பு நிறுவனம் உட்பட படத்தில் பணியாற்றிய அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்