- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த முக்கிய நட்சத்திரத்திற்கு சென்ற கதையை தான் கைப்பற்றி இருக்கிறாரா சூர்யா... நாயகனின் 45 ஆவது...

அந்த முக்கிய நட்சத்திரத்திற்கு சென்ற கதையை தான் கைப்பற்றி இருக்கிறாரா சூர்யா… நாயகனின் 45 ஆவது திரைப்படம் குறித்து கசிந்த தகவல்… இயக்குனர் யார் என்பதும் ஆச்சரியம்தான்…

- Advertisement -

சூர்யா தற்போது தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதற்கு முன்னதாக அவர் எடுத்த, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த உத்வேகத்துடன், தற்போது சூர்யா படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது. இந்தப் படத்திற்காக, பங்க் ஹேர் ஸ்டைல் உடன் சூர்யா காட்சி இருக்கிறார். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் டூயட் பாடுகிறார். இதுபோக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜும் படத்தில் இருக்கிறார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான, ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுபோக கருணாகரன், ஜெயராம் எனப் படத்தின் நட்சத்திரங்கள் நீண்டு கொண்டே செல்கிறார்கள். அந்தமானை தொடர்ந்து கோவா சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத சூழலில், படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட சூர்யா திட்டமிட்டு உள்ளாராம்.

- Advertisement -

ஏனென்றால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியில் வேட்டையன் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டதால் தள்ளிப்போனது. இது சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது. வேட்டையனுக்கு பயந்து கங்குவா எஸ்கேப் ஆகி விட்டதாக பலரும் கலாய்த்து வந்தனர். இப்படியான சூழலில் தான் பொங்கலுக்கு எந்த திரைப்படம் வெளியானாலும் பரவாயில்லை என்று, அந்த நாளை படக்குழுவினர் லாக் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் பணியாற்று இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர் ஜே பாலாஜி இந்த படத்தில் காண கதையை முதலில் விஜய்க்காகத்தான் வைத்திருந்தாராம். ஆனால் அது கடைசி வரை நடைபெறாததால், தற்போது அந்த கதையை தான் அவர் சூர்யாவை வைத்து எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜனவரி மாதம் இந்த படத்திற்கான சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்