- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் போட்டியில் திடீரென பின்வாங்கிய சுந்தர் சி - ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கும் அதே...

பொங்கல் போட்டியில் திடீரென பின்வாங்கிய சுந்தர் சி – ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கும் அதே சிக்கல்தான் – வசமா மாட்டிக்கிட்டாங்களோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களை குறிவைத்து படங்கள் எடுக்கப்பட்டு, அந்த பண்டிகை நாட்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவர். குறிப்பாக குடும்பம், குடும்பமாக வருவதால் கணிசமான வசூல் கிடைக்கும் என்பதுதான்.

அந்த வகையில் வரும் ஜனவரி 14ம் தேதி, தைப்பொங்கல் பண்டிகை காலத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த லால் சலாம், நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் மற்றும் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 ஆகிய படங்கள் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் திடீரென பொங்கல் பண்டிகைக்கு சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால், குறிப்பிட்ட நாட்களுக்குள் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடக்கவில்லை. அதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுதான் உண்மையான காரணமா, அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவில் 4 படங்கள் ரிலீஸ் என்பது போல, தெலுங்கு மொழியில் ஆந்திராவில் நடிகர் வெங்கடேஷ், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட 3 முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகின்றன.

- Advertisement -

தெலுங்கில் டாப் ஸ்டார்களாக உள்ள அந்த நடிகர்களின் படங்களே ஆந்திராவில் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்து விடும். அதனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால், தமிழ் தெலுங்கு என 2 மொழிகளிலும் அரண்மனை 4 வெளிவரும் நிலையில், இந்த பிரச்னையின் காரணமாக சுந்தர் சி கமுக்கமாக பின்வாங்கி இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ஒரு விதத்தில், இதில் தப்பித்துவிட்டார் என்றும் சொல்லலாம்.

ஆனால் அதே வேளையில் லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் படங்களும் தெலுங்கு மொழியில் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இதில் எப்படி போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைத்து, எதிர்பார்த்த கலெக்சனை அந்த படங்கள் பெறுமா, என்ற கேள்வியும் எழுந்துள்ளது.எனவே ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள் என்றுதான் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்