தமிழ் சினிமாவில் பல அழகான நடிகைகள் நடித்திருக்கின்றனர். அதில் ஒரு சிலர் மேக்கப் போட்டால் மட்டுமே அழகிகளாக காட்சி தருவார்கள். மேக்கப் கலைத்து விட்டால் ரசிக்கும் விதமான அழகு இருக்காது என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் மேக்கப் இல்லாமலேயே கொள்ளை அழகில் ஒரு சில நடிகைகள் இருப்பார்கள். அதில் ஒருவர்தான் நடிகை மீனா.
நடிகை மீனா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த மீனா பிறகு எஜமான் படத்தில் ரஜினிக்கே ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல வீரா முத்து போன்ற படங்களிலும் மீனா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அண்ணாத்த படத்திலும் நடிகை மீனா நடித்திருந்தார். ஆனால் நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக இதில் மீனா நடித்திருந்தார். தொடர்ந்து நடிகை மீனா தேர்வு செய்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
நடிகை மீனா பல முன்னணி ஹீரோக்களுடன் பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மட்டுமின்றி கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் பிரபு கார்த்திக் அர்ஜூன் முரளி பார்த்திபன் பிரபுதேவா என பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக முத்து படத்தில் ரஜினியுடன் மீனா ரங்கநாயகி என்ற கேரக்டரில் நடித்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
முத்து படத்தில் நடித்த போது நடந்த ஒரு சம்பவம் குறித்து நடிகை மீனா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ரஜினி சார் எப்போதுமே வேகமாக நடப்பார். அப்படி ஒரு நாள் முத்து படப்பிடிப்பு நடந்தபோது மக்கள் அதிகப்படியாக அங்கு திரண்டு வந்தனர். அப்போது நான் எழுந்து நிற்பதற்குள் ரஜினி சார் வெகுதூரம் நடந்து சென்றுவிட்டார்.
அங்கு வந்த மக்கள் கூட்டத்தில் இருந்து என்னை அங்கிருந்த உதவியாளர்கள் தான் காப்பாற்றினார்கள். அதன்பின்னர் யாரிடமும் நான் எதுவும் பேசவில்லை. கே எஸ் ரவிக்குமார் சார், என்ன ஆச்சு என்றுதான் கேட்டார். நான் அழுதுவிட்டேன். பின்னர் இருவரும் என்னை சமாதானப்படுத்தினார்கள் என்று நடிகை மீனா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





