அஜித்குமாரின் 64வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இதற்கு முன்பு திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கவில்லை.
இந்த சூழலில், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் சூட்டிங்கின் போது அவருக்கு அஜித் குமாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தன்னை எங்கு சென்றாலும் தல ரசிகர் என்று காட்டிக் கொள்ளும் ஆதிக், அஜித் குமார் உடன் நெருங்கி பழகினார். அப்போது தனக்கான கதை ஒன்றைக் கூற அதற்கு கேட்ட அஜித்தும் உடனடியாக டிக் செய்து உள்ளார்.
இருப்பினும் ஆதிக் எந்த ஒரு பெரிய வெற்றி திரைப்படத்தையும் கொடுக்காததால், அதற்கான அறிவுரையை அஜித் கூட, விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் இயக்கினார். ஆனால் இந்த திரைப்படத்தை யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. சொல்லப் போனால் வழக்கமான ஆதிக் படமாக தான் இருக்கும் என்று பலரும் கருதினார்கள்.
ஆனால் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது மார்க் ஆண்டனி திரைப்படம். இதற்கு முக்கிய காரணம் இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று ஆதிக் ரவிச்சந்திரனின் நேர்த்தியான திரைக்கதை. மற்றொன்று எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான நடிப்பு. இந்த இரண்டும் தான் அந்த படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்றது.
தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் இணைந்திருக்கும் குட் பேட் அக்னி திரைப்படத்தின் ஷூட்டிங்கும் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முழுக்க முழுக்க அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
ஏற்கனவே இதிலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி இருந்தாலும் இப்போது வரை அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படியான சூழலில்தான் தற்போது தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. அதாவது தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் சதுரங்க வேட்டை நட்டி ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருமே நடிப்பில் பின்னி பெடல் எடுப்பதால் குட் பேட் அக்லி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்ய உள்ளது.





