- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்டிப்பா நடிக்க முடியாது, பணத்தை காட்டினால் மயங்கி விடுவேன் என்று நினைச்சீங்களா? - ஓபனாக பேசிய...

கண்டிப்பா நடிக்க முடியாது, பணத்தை காட்டினால் மயங்கி விடுவேன் என்று நினைச்சீங்களா? – ஓபனாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி!

- Advertisement -

எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் அதில் தொழில் தா்மம் என்ற ஒன்றை கட்டாயம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். அதுதான் அந்த தொழிலுக்கு செய்கிற மரியாதையாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் லாபம் மற்றும் கணிசமான வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு தொழில் தர்மத்தை காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர்.

உதாரணமாக சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகும் நடிகர் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக எப்படிப்பட்ட விளம்பரங்களிலும் நடிக்க முன்வருகின்றனர். அதுவும் ஆபத்தான சூதாட்ட செயலிகளில் நடித்த பலரது ஆர்வத்தை தூண்டி விட்டனர். இதனால் பலரும் அந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டது.

- Advertisement -

அதே போல் விளம்பர வருமானத்துக்காக அந்த பொருளின் தரம் அறியாமல், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அறியாமல் சில நடிகர் நடிகைகள் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிப்பது கடும் விமர்சனங்களை பின்னாளில் ஏற்படுத்தி விடுகிறது. எனவே கூடுமான வரை சில நடிகர்கள் விளம்பர படங்களில் நடிக்க முன்வருவதில்லை.

பாலிவுட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சுனில் ஷெட்டி. இந்தியில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் படங்களாகும். நடிகர் ஷ்யாம் ஹீரோவாக நடித்த 12 பி என்ற தமிழ் படத்தில் சுனில் ஷெட்டி நடித்திருக்கிறார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 2020ம் ஆண்டில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுனில் ஷெட்டி கூறியதாவது, புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்திற்காக என்னை அணுகி பேசினார்கள். அதற்கு சம்பளமாக 40 கோடி ரூபாய் தருவதாக கூறினார்கள். பணத்தைக் காட்டினால் மயங்கி விடுவேன் என்று நினைத்தீர்களா என்று அவர்களை பார்த்து நான் கேட்டேன். அந்த பணம் தேவையாக இருந்தாலும் என் மகன், மகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் நான் செய்ய மாட்டேன்.

அது போன்ற விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கக் கூடாது என்ற என்னுடைய கொள்கைக்காக மறுத்து விட்டேன். இப்போது அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க என்னை யாரும் கேட்பது இல்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்து கொள்ளவே மாட்டேன் என்று நடிகர் சுனில் ஷெட்டி அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்