- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மனுக்காக ரஜினிகாந்தை சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்... அப்படி என்றால் அந்த தகவல் உண்மை...

மூக்குத்தி அம்மனுக்காக ரஜினிகாந்தை சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்… அப்படி என்றால் அந்த தகவல் உண்மை தானோ… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…

- Advertisement -

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நயன்தாரா சமீப காலமாக நடித்து வருகிறார். இதில் கோலமாவு கோகிலா திரைப்படம் தான் அவருக்கு முதல் படமாக அமைந்தது. அது மிகப்பெரிய ஹிட் அடிக்க அதன் பிறகு மாயா, அறம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதன்பிறகு, நயன்தாராவுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அந்த அளவு வெற்றி படங்கள் எதுவும் வரவில்லை.

இருப்பினும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் விதிவிலக்காக அமைந்தது. நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாத இந்த திரைப்படம் ஓ டி டி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கினர்.

- Advertisement -

ஃபேண்டஸி பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தது. சொல்லப்போனால் படத்தின் முதல் பாதி அருமையாக இருந்ததாக பலரும் கூறினார்கள். ஆர் ஜே பாலாஜியின் குடும்ப நிலை, நயன்தாராவின் என்ட்ரி, பிறகு சூடு பிடிக்கும் அம்மன் கதாபாத்திரம் என அந்த திரைப்படம் விறுவிறுப்பாகவே சென்றது.

இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக பலரும் மூக்குத்தி அம்மனுக்கு குட் சர்டிபிகேட் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கப் போவதில்லை என்று அறிவித்தார்கள்.

- Advertisement -

அவருக்கு பதில் சுந்தர் சி படத்தை இயக்கப் போவதாக தெரிவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆர் ஜே பாலாஜியும் சூர்யாவின் 45 வது திரைப்படத்தை இயக்க சென்று விட்டார். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான ஹீரோ ஒருவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் பூஜை மார்ச் ஆறாம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஐசரி கணேஷ் வாழ்த்து பெற்றுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினிகாந்த் அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. தற்போது இருவரும் சந்தித்திருப்பதால் அந்த தகவல் உண்மையாகத்தான் இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்