- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் பாஸ்ட் வேகத்தில் விறுவிறுப்பாக சூர்யா 44 படப்பிடிப்பு, லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு - உற்சாகத்தில்...

சூப்பர் பாஸ்ட் வேகத்தில் விறுவிறுப்பாக சூர்யா 44 படப்பிடிப்பு, லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக சரியாக ஓடவில்லை. குறிப்பாக எதற்கும் துணிந்தவன், காப்பான் போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை. சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை தவிர சூர்யாவுக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்த படங்கள் எதுவும் இல்லாததால் அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகியிருந்தும், இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பை இன்னும் வெற்றிமாறன் முடிக்காததால், வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே டைரக்டர் பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டிய வணங்கான் படத்திலும் சூர்யா நடிக்காமல் பாதியில் வெளியேறி விட்டார். அதே போல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படமும் சூர்யா செய்த இடையூறுகளால் இயக்குனரே படத்தை டிராப் செய்துவிட்டார். அதே போல் இந்தியில் சூர்யா நடிக்க வேண்டிய கர்ணா படமும் டிராப் ஆகி விட்டது.

ஏனெனில் கர்ணா படத்தை தயாரிக்க வேண்டிய தயாரிப்பு நிறுவனம், மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை சூர்யாவை நம்பி தயாரிக்க முன்வர யோசித்து, படத்தை டிராப் செய்துவிட்டது. இப்படி தொடர்ந்து நல்ல நல்ல இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டிய சூர்யா அந்த வாய்ப்பை எல்லாம் இழந்து விட்டார்.

- Advertisement -

இந்த சூழலில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என தற்காலிக பெயர் வைத்த படங்களில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. அந்தமானில் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

ஊட்டியில் நடந்த படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. லேசான காயம் சரியான நிலையில், மீண்டும் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலம், இடுக்கியில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட 2 நாட்கள் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளதாக, லேட்டஸ்ட் அப்டேட் ஆக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்