- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடடே!... சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திற்கான டைட்டில், அந்த நிகழ்ச்சியில்தான் அரங்கேற போகிறதா... விசில் போட...

அடடே!… சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திற்கான டைட்டில், அந்த நிகழ்ச்சியில்தான் அரங்கேற போகிறதா… விசில் போட காத்திருக்கும் ரசிகர்கள்…

- Advertisement -

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவரது 44-வது திரைப்படமாக உருவாகி இருக்கிறது ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், காதல் கலந்த கேங்ஸ்டர் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் பெரும் வரவேற்பு பெற்றது. அதில் தனது காதலிக்காக, அடிதடியை கைவிடும் இளைஞர் அதனை தனது காதலியிடம் கூறுவது போன்று காட்சிகள் இடம்பெற்று இருந்தன. முக்கியமாக டீசரில் இசை பட்டையை கிளப்பியிருந்தது.

- Advertisement -

வழக்கம்போல் சந்தோஷ் நாராயணன் அதில் தீவிர கவனம் செலுத்தி இருந்தார். இப்படி டீசரில் அனைத்து விஷயங்களும் பக்காவாக இருக்க, வரும் மே ஒன்றாம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனது 45 வது படத்திற்காக ஆர் ஜே பாலாஜியுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.

இது ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் சூர்யாவுக்கு வழக்கறிஞர் மற்றும் கருப்பசாமி என இரண்டு ரோல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லப்பர் பந்து பட சுவாசிகா இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

இதுபோக யோகி பாபு நட்டி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஆர் ஜே பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கோவை மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிறகு சென்னையின் வண்டலூர் பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்தினார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்த சூழலில், ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் நிகழ்ச்சியின் போது, சூர்யா 45 வது படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில், ஆர் ஜே பாலாஜி வர்ணனை செய்து வந்தார். ஒருவேளை அவரது ஐடியாவாக கூட இது இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்