- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் பிரபல இயக்குனர்களுடன் கை கோர்க்கும் நடிகர் சூர்யா… அட அந்த லிஸ்ட்டில் இப்போது இவரும்...

மீண்டும் பிரபல இயக்குனர்களுடன் கை கோர்க்கும் நடிகர் சூர்யா… அட அந்த லிஸ்ட்டில் இப்போது இவரும் இணைந்து விட்டாரா? – லேட்டஸ்ட் தகவல் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ரெட்ரோ. கடந்த ஆண்டில் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று இந்த படம் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில் ரெட்ரோ படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு சூர்யா தனது 45வது படமாக நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். வருகிற பிப்ரவரி 19ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நாளில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படமும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கருப்பு படத்துக்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்திலும் தொடர்ந்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்திலும் இப்போது நடிகர் சூர்யா பிஸியாக நடித்து வருகிறார். இந்த சூழலில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் 48வது படம் 49வது படம் குறித்து தகவல் கசிந்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இந்த படம் சூர்யாவுக்கு பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் கதையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி விட்டார்.

- Advertisement -

இந்த சம்பவத்தால் இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது உண்மைதான். அதன்பிறகு அதே படத்தை பராசக்தி என்று டைட்டில் மாற்றி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அது சமீபத்தில் வெளியானது. ஆனால் பராசக்தி படம் பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகர் சூர்யா எப்படியோ தப்பித்து விட்டார் என்றுதான் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்தடுத்த படங்களை இயக்குபவர்கள் பாண்டியராஜ் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் பெயர்கள் இயக்குனர்கள் லிஸ்ட்டில் வந்துள்ளன. அதில் 48வது படம் பாண்டிராஜனும் 49வது படம் சுதா கொங்கராவும் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சூர்யா நடித்த பசங்க எதற்கும் துணிந்தவன் படங்களை இயக்கியவர் பாண்டிராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்