- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தில் இந்த நட்சத்திரம் இடம்பெற்று இருக்கிறாரா... அசத்தலான அப்டேட்... ஆச்சரியத்தில் தமிழ்...

பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தில் இந்த நட்சத்திரம் இடம்பெற்று இருக்கிறாரா… அசத்தலான அப்டேட்… ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் நடிகராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். வெறும் மூன்றே மூன்று திரைப்படங்களை கொடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் அந்த மூன்றிலும் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதில் அவர் இயக்குனராக அறிமுகமான கோமாளி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது. தொடர்ந்து ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து உடன் கைகோர்த்து டிராகன் திரைப்படத்தில் நடித்தார் பிரதீப் ரங்கநாதன்.

- Advertisement -

முதல்முறையாக அவர் இயக்கத்தை கைவிட்டு, முழுக்க முழுக்க நடிகர் ஆனார். வெறும் 35 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படி தொடர் வெற்றி காரணமாக, பிரதீப் ரங்கநாதன் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். அவரது படத்திற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் கூடியிருக்கிறது.

இப்படியான சூழலில் அவர் அடுத்ததாக சுதா கொங்கரா உதவியாளரான கீர்த்தீஸ்வரனுடன் கைகோர்த்துள்ளார். இதற்கு டியூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து இதனை தயாரித்து இருக்கிறது மைத்திரி மூவிஸ் நிறுவனம். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார்.

- Advertisement -

படத்தில் சரத்குமாருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இதற்கு இசையமைத்து வருகிறார். அண்மையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

இந்த நிலையில் தற்போது டியூட் திரைப்படத்திலிருந்து மற்றொரு தகவல் கசிந்து இருக்கிறது. அதாவது படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாராம். குறைந்த காட்சிகள் மட்டுமே அவர் வந்தாலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவலால் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்து இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்