- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் வெற்றி விழாவில் என்ன பேசப் போகிறார் விஜய், அரசியல் பிரவேசம் குறித்த...

லியோ படம் வெற்றி விழாவில் என்ன பேசப் போகிறார் விஜய், அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகிறதா? – காத்திருக்குது டுவிஸ்ட்

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் இன்று அதிகளவில் வசூல் குவிக்கும் முதல் நடிகராக இருக்கிறார். லியோ படம் குறித்த விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், படம் ரிலீஸ் ஆன 10 நாட்களில், 500 கோடி ரூபாயை கடந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் யு.எஸ் டாலர்கள் ( 41.50 கோடி ரூபாய்) வசூலித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் விஜய் ஒரு சாதாரண நடிகராக தான் பார்க்கப்பட்டார். நடிகர் விஜய் நடித்த ரசிகன் படத்தையும், விஜயையும் தவறாக விமர்சித்த ஒரு பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அதன்பின், பல ஆண்டுகள் அந்த பத்திரிகையில் விஜய் படமோ, பெயரோ வராது. காதலுக்கு மரியாதை படம் வந்த பிறகு, வந்த பத்திரிகை நிறுவனமே, விஜயிடம் மன்னிப்பு கேட்டு, அவரையே ஒரு தொடர் எழுத வைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.

- Advertisement -

அதற்கு காரணம், விஜய் இனி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடையப் போகிறார். காதலுக்கு மரியாதை படமும், அது தந்த மாஸ் வெற்றியும் அவரை வேறொரு இடத்துக்கு நகர்த்தியது. இனியும் விஜயை புறக்கணிக்க முடியாது என்ற நிலையில், அந்த பத்திரிகை நிர்வாகமே உணர்ந்து, விஜயை தொடர் எழுத வைத்தது. அப்படி, தன்னை விமர்சித்தவர்களையே தன்னிடம் மண்டியிட வைத்தவர்தான் விஜய்.

இப்போது, விஜய் அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. இன்னும் சில படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு மிகப்பெரிய அதிருப்தியை தந்திருக்கிறது. அதிமுக போட்டியாக உள்ள நிலையில், விஜயும் போட்டியாளராக வருவதை திமுக விரும்பவில்லை.

- Advertisement -

அதன் காரணமாகவே, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்தது, ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்தது, அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி ரத்து போன்ற பிரச்னையை திமுக அரசு செய்ததாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மறைமுகமாக ஸ்டாலினும், உதயநிதியும் விஜய்க்கு எதிராக செயல்படுவதாகவும் புகார்கள் விஜய் தரப்பில் உள்ளது.

இந்நிலையில், நாளை நடக்கும் லியோ பட வெற்றிவிழாவில் விஜய், தனது அரசியல் பிரவேசம் பற்றி பேச போகிறாரா, அல்லது படம் குறித்து பேசுவாரா, அல்லது தன்னை கடுமையாக விமர்சித்து வரும் ரஜினி ரசிகர்களுக்கு, குட்டிக்கதை மூலம் எதுவும் பதில் தரப் போகிறாரா என்ற பரபரப்பான சூழலில், ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், ஏதேனும் ஒரு விதமான டிவிஸ்ட் நாளை, லியோ வெற்றி விழாவில் நடக்க இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்