நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட சில காட்சிகளில் மட்டுமே துணை நடிகராக நடித்திருப்பார். குறிப்பாக புதுப்பேட்டை வெண்ணிலா கபடிக்குழு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் அவர் நடித்திருப்பதே இப்போது பார்த்தால்தான் தெரியும்.
அதன்பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து இப்போது நட்சத்திர நடிகராக ரசிகர்களின் முன்பு திரையில் நிற்கிறார். ஹீரோவாக மட்டுமின்றி எந்த மாதிரியான கேரக்டரிலும் நடிக்கும் மன தைரியம் கொண்டவர் விஜய் சேதுபதி.
ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் மற்றும் ஷாருக்கான் போன்ற ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருக்கிறார். இன்னும் பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்துள்ளார். கடைசி விவசாயி ஆரஞ்சு மிட்டாயர் போன்ற சில படங்களை அவரே சொந்தமாக தயாரித்துள்ளார்.
இப்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஜெயிலர் 2 படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர்பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்கிறார்.
அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவ்வளவு பிஸியான ஷெட்யூலிலும் அவர் விளம்பரங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளார். சமீபத்தில் சென்னை ஈசிஆர் ரோட்டில் நடந்த விளம்பர படம் ஷூட்டிங் ஒன்றில் விஜய் சேதுபதி பங்கேற்று 2 நாட்கள் அவர் நடித்திருக்கிறார்.
இது பேஸ்புக் விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ந்து இடைவெளியின்றி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. வழக்கமாக கவுண்டமணி சந்தானம் வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள்தான் பல படங்களில் கமிட் ஆகி மணிக்கணக்கில் கால்ஷீட் தந்து ஒரே நாளில் 3 படங்களில் நடிப்பார்கள். அந்த நடிகர்களை போல விஜய் சேதுபதி மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





