- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46வது படம் - ஷூட்டிங் எப்போ ஆரம்பிச்சு எப்போ...

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46வது படம் – ஷூட்டிங் எப்போ ஆரம்பிச்சு எப்போ முடிக்கறாங்க தெரியுமா? – இது வேற லெவல் ப்ரோ…!

- Advertisement -

தமிழில் தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை அவர் இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

இதையடுத்து இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தில் நாயகியாக மமிதா பைஜூ மற்றும் முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான தானா சேர்ந்த கூட்டம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மேலும் திருமணத்துக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இது அவரது 2வது ரவுண்டாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் சூர்யாவுக்கு கங்குவா படம் பெரிய வெற்றியை தராத நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இப்போது ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படம் காதல் உணர்வுகளை கதைக்களமாக கொண்டிருக்கிறது. வரும் மே 1ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்காத சூர்யா 45 என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். மன்சூர் அலிகான் நட்டி யோகிபாபு ஷிவதா சுவாசிகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூலை மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் என 3 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே வாடிவாசல் படப்பிடிப்பு துவங்கினாலும் அதிலும் ஒரு ஷெட்யூல் நடித்துவிட்டு பிறகு வெங்கி அட்லூரி படப்பிடிப்பை சூர்யா தொடர்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்