- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரவு 11.30 மணிக்கு டிவீட் பதிவுக்கான பின்னணி, பிரேக் ஆன புறநானூறு, சூர்யா கேரக்டரில்...

இரவு 11.30 மணிக்கு டிவீட் பதிவுக்கான பின்னணி, பிரேக் ஆன புறநானூறு, சூர்யா கேரக்டரில் நடிக்க போவது சிம்புவா? – வெளியான உண்மை தகவல்கள்

- Advertisement -

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்தது. இடையிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படத்தின் பேட்ச் ஒர்க், டப்பிங் என அடிக்கடி சூர்யா அங்கு சென்றதால், புறநானூறு ஷூட்டிங் தள்ளிப் போனது. இதற்கிடையே இந்த படம் முற்றிலும் தடைபட்டு விட்ட உண்மை தகவல் வெளியாகி உள்ளது.

இறுதிச்சுற்று, துரோகி, சூரரைப் போற்று போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் சுதா கொங்காரா. இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிசெய்தவர். திரைக்கதை ஆசிரியராக தமிழ், தெலுங்கு, இந்தி படவுலகில் மிகவும் கவனிக்கப்பட்டவர். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என 2 படங்களுமே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த, வெற்றிப்படங்களாக அமைந்தன.

- Advertisement -

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில், சுதா கொங்காரா இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா நடித்துள்ளார். இப்போது புறநானூறு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து சூர்யாவும், சுதா கொங்காராவும் ஒன்றாக கையெழுத்திட்டு விடுத்த அறிக்கை ஒன்றில், இந்த படம் எடுக்க நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பெஸ்ட் ஆக தர விரும்புகிறோம், என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் புறநானூறு படம் இனி இயக்கப்பட மாட்டாது. அந்த படம் இத்தோடு நிறுத்தப்பட்டு விட்டது என்பது தெரிய வந்துள்ளது. இதற்கான காரணம் நடிகர் சூர்யா தான் என்றும் கூறப்படுகிறது. அதாவது படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா தான். சிறந்த திரைக்கதை ஆசிரியராக அவர் புகழ் பெற்றவர். இந்நிலையில் அவர் எழுதி தரும் ஸ்கிரிப்ட்களில் அடிக்கடி திருத்தம் சொல்வது, மாற்றம் செய்வது என தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் நடிகர் மற்றும் கதாநாயகன் சூர்யா.

- Advertisement -

இப்படி தொடர்ந்து திருத்தங்கள், மாற்றங்கள் சொல்லிய சூர்யாவால் ஒரு கட்டத்தில் கடுப்பான சுதா கொங்காரா இனி இந்த படத்தை நாம் இயக்கினால், அது நம்முடைய படமாக இருக்காது, அந்த அடையாளத்தை இந்த படைப்பு இழந்துவிடும் என்று முடிவெடுத்த சுதா கொங்காரா, அந்த படத்தை விட்டு விலகிவிட்டார். அதனால்தான் இரவு 11.30 மணிக்கு அப்படி ஒரு அறிக்கையை இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு டிவிட்டாக வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே வணங்கான், வாடிவாசல் படங்களை இழந்த சூர்யா, இப்போது புறநானூறு படத்தில் நடிக்கிற வாய்ப்பையும் இழந்துவிட்டார். இப்படி நல்ல இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவரும் சூர்யாவால், ரசிகர்கள் பலத்த அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்கிடையே புறநானூறு படத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க சுதா கொங்காரா திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்