- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா படத்திற்காக உருவாகும் தலைநகரம்... சுதா கொங்கராவின் மாஸ்டர் பிளான்... இதை யாருமே எதிர்பார்க்கலயேப்பா...

சூர்யா படத்திற்காக உருவாகும் தலைநகரம்… சுதா கொங்கராவின் மாஸ்டர் பிளான்… இதை யாருமே எதிர்பார்க்கலயேப்பா…

- Advertisement -

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் சுதா கொங்கரா. அங்கிருந்து படிப்படியாக சினிமா கற்றுக் கொண்ட அவர், துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்தனர். ஆனால் இந்த திரைப்படம் வந்ததும் திரையரங்கை விட்டு போனதும் பாதி பேருக்கு தெரியாது.

அந்த அளவுக்கு படுதோல்வியை துரோகி சந்தித்ததால், அடுத்த படத்தில் மிக கவனமாக இருந்தார் சுதா கொங்கரா. குத்துச்சண்டையை மையப்படுத்தி கதை எழுத, அதில் நாயகனாக மாதவன் நடிக்க இறுதிச்சுற்று திரைப்படம் வெளியானது. இதில் நடித்த ரித்திகா சிங், உண்மையான குத்து சண்டை வீராங்கனை என்பதால் படத்தில் தனக்கான போர்ஷனை சரியாக செய்திருப்பார்.

- Advertisement -

அவரது நடிப்பு பாராட்டை பெற, இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்தார் சுதா கொங்கரா. இந்த முறை விமான நிறுவனத்தை நடத்திய கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சூரரை போற்று திரைப்படத்தை அவர் எடுத்தார்.

தொய்வில்லாத திரைக்கதை, சூர்யாவின் அபார நடிப்பு, யோசிக்க வைத்த வசனங்கள் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா பெற்றார். அதேபோல் சூரரைப் போற்று திரைப்படமும் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றது.

- Advertisement -

இந்த நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக சிம்புவுடன் இணைய போவதாக தகவல் வெளியானது. அதேசமயம் அவர் அஜித்திடம் ஒரு கதை கூறியிருப்பதாகவும், விரைவில் அதற்கான தகவல் வெளியாகலாம் என்றும் பேசப்பட்டது. இப்படியான சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மீண்டும் சூர்யாவுடனே இணைந்தார் சுதா கொங்கரா.

இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்குப் புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி திணிப்பு பற்றியும் அதற்கு எதிரான போராட்டத்தை பற்றியும் இந்த திரைப்படம் பேசப்போகிறதாம். 1950 முதல் 65 ஆம் கால கட்டங்களில் நடப்பது போல் இந்த கதை எடுக்கப்படுகிறது. இதற்காக அந்த காலத்தில் இருந்த சென்னையை, அப்படியே கண்முன்னே காட்சிப்படுத்த சுதா கொங்கரா திட்டமிட்டு உள்ளாராம். இதற்காக சென்னை அண்ணா சாலை செட் போடப்பட்டு வருகிறதாம். அடுத்த மாதம் இதற்கான சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்