- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் கைகோர்க்கும் பாலிவுட் நட்சத்திரம்... அதுவும் படத்திற்கு டைட்டில்தான் இருக்கிறதுலையே...

சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் கைகோர்க்கும் பாலிவுட் நட்சத்திரம்… அதுவும் படத்திற்கு டைட்டில்தான் இருக்கிறதுலையே மாஸ்…

- Advertisement -

ரெட்ரோ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. நகைச்சுவை நடிகராக இருந்து பிறகு இயக்குனராக உயர்ந்த ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இதுவே இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஏற்கனவே இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

இப்படி இருக்கையில் இவர் சூர்யாவை வைத்து எப்படி மாஸ் காட்சிகளை கொண்டு வந்திருப்பார், இந்த ஜோடி எந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா, சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து டீசர் வெளியானது. முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியாக ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது அதன் டீசரை பார்க்கும் போதே தெரிவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. ஆர் ஜே பாலாஜியும் இதில் வில்லன் ரோலில் வருகிறார்.

ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கருப்பசாமி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த திரைப்படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தள்ளிப் போகும் என்று கூறப்பட்ட நிலையில் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்து இருக்கிறார் சூர்யா.

- Advertisement -

இவர் கடைசியாக கொடுத்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இதனால் இந்த காம்போ மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படத்தை எடுக்கிறார்கள். மமீதா பைஜூ படத்தின் கதாநாயகியாக வருகிறார்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய அப்டேட் ஆக, பாலிவுட் நடிகர் அனில் கபூர் படத்தின் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் டைட்டிலே மிக வித்தியாசமாக இருப்பது அதன் மீதான ஆர்வத்தை தூண்டி இருப்பதாக இணையத்தில் பலரும் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்