- Advertisement -
Homeபொழுதுபோக்குவேள்பாரி கதையை படிச்சப்பவே நான் அந்த முடிவை பண்ணிட்டேன் - ஷங்கர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...

வேள்பாரி கதையை படிச்சப்பவே நான் அந்த முடிவை பண்ணிட்டேன் – ஷங்கர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் – ஆனா அந்த விஷயத்தை சொல்லாம விட்டுட்டாரே?

- Advertisement -

இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர் டைரக்டர் ஷங்கர். தமிழ் சினிமாவை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் டைரக்டர் ஷங்கர் மிக முக்கியமானவர். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை, வெற்றியை பெற்றுள்ளன.

குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஜென்டில்மேன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து முதல்வன், காதலன், சிவாஜி, இந்தியன், பாய்ஸ், ஜீன்ஸ், நண்பன் என பல நல்ல படங்களை தந்த டைரக்டர் ஷங்கர், இப்போது கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் ரசிகர்களை சந்திக்க நாளை வருகிறார். தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, துபாய் என கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன், டைரக்டர் ஷங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டைரக்டர் ஷங்கர் அடுத்ததாக வேள்பாரி என்ற நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். மதுரை எம்பி சு. வெங்கடேசன் எழுதிய இந்த வேள்பாரி நாவல் மிகப்பெரிய அளவில் வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் வேள்பாரி நாவல் குறித்து சமீபத்தில் பேசிய டைரக்டர் ஷங்கர், அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்க சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு வேள்பாரி நாவலை படிக்க நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்த காலகட்டத்தில், வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் அந்த நாவலை படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க என் மனசுல காட்சிகள் விரிந்தது.

வேள்பாரி நாவலை படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணனும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய எழுத்தாளர் சு. வெங்கடேசன் கிட்ட பேசி அதற்கான ரைட்ஸ் வாங்கிட்டேன். வேள்பாரி மூன்று பாகங்களாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். அது ரெடியா இருக்கு, யார் நடிக்கிறாங்க என்பதை மட்டும் இன்னும் முடிவு பண்ணவில்லை என்று அந்த நிகழ்ச்சியில் டைரக்டர் ஷங்கர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக ஏற்கனவே நடிகர் அஜித்குமாரிடம் இயக்குனர் ஷங்கர் பேசியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்