- Advertisement -
Homeபொழுதுபோக்குரி ரிலீஸ் கோதாவில் அடுத்து களத்தில் குதிக்கும் நடிகர் சூர்யா; வரப்போகும் அவரது படம்...

ரி ரிலீஸ் கோதாவில் அடுத்து களத்தில் குதிக்கும் நடிகர் சூர்யா; வரப்போகும் அவரது படம் என்னவென்று தெரியுமா? அட இந்த மாஸ் ஹிட் படமா? வேற லெவல்பா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் துவங்கியிருக்கிறது. நடிகர் விஜய் நடித்த கில்லி படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் 20 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் இப்போதும் விஜய் நடித்த கில்லி படம் ஹவுஸ்புல் கட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. காட்சிகளின் இடையிடையே விஜய் ரசிகர்கள், ரசிகைகள் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு, தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்ததாக அஜித்குமார் நடித்த தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்களும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களுக்கு வந்தன. ஆனால் விஜய் அளவுக்கு அஜித் நடித்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒரே நாளில் மூன்று படங்களையும் ரி ரிலீஸ் செய்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் எப்படி இருப்பினும் விஜயுடன் ஒப்பிடும்போது, அஜித்குமாருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கம்மிதான் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த கட்டமாக தியேட்டர்களில் புதிய படங்கள் வரும்போது இந்த மாதிரியான ரி ரிலீஸ் படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்வதால், புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படத்துக்கு பெரும்பாலான இடங்களில், பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் கில்லி படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களில், கில்லி படமே ஓடட்டும் என ரத்னம் படத்தை சின்ன தியேட்டர்களுக்கு மாற்றி விட்டனர்.

அதேபோல் சில தினங்களுக்கு முன், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படமும் பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் சில இடங்களில் சின்ன தியேட்டர்களுக்கு கொடுத்துள்ளனர். ஏனெனில் பெரிய தியேட்டர்களில் கில்லி படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். கடந்த 2004ம் ஆண்டில் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன் வந்த கில்லி படம் இப்படி ஒரு அமோக வரவேற்பை பெற்றது ஆச்சரியம் தந்துள்ளது.

- Advertisement -

இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரி ரிலீஸ் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிதாக திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் அடுத்ததாக தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படமும், அதே போல் விஜய் நடித்த வில்லு படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

இந்த ரி ரிலீஸ் களத்தில் நடிகர் சூர்யாவும் களம் இறங்குகிறார். அந்த வகையில் சூர்யா பிறந்தநாள் அன்று, அவர் நடித்த கஜினி படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சய் ராமசாமியாக சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் . இந்த படத்தில் நயன்தாரா, அசின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். தமிழ் சினிமா பயணத்தில் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய வெற்றிப் படம் இது. மாஸ்ஹிட் ஆன படம் . இது மீண்டும் ரி ரிலீஸ் செய்வது, சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்