- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா... அடேங்கப்பா, அப்போ ஈஸியா ஆயிரம் கோடி...

கங்குவா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா… அடேங்கப்பா, அப்போ ஈஸியா ஆயிரம் கோடி பாத்துருவாங்களோ…

- Advertisement -

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கிறது. ஆயிரம் கோடி வசூல் செய்யும் 2000 கோடி வசூல் செய்யும் என்று கூறிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை தான் தற்போது இணையதள வாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 

- Advertisement -

இதற்கு முந்தைய பேட்டிகளில் பேசிய ஞானவேல் ராஜா, கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது வேண்டுமானால் பிற படங்கள் வெளியிடப்படலாம். ஆனால் அதன் இரண்டாம் பாகம் வரும்போது எந்த படமும் வெளியாகாது என்று கூறி இருந்தார். அதேபோல் படம் வேறு லெவலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

 

- Advertisement -

மும்பை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சூர்யா, கங்குவா திரைப்படத்தை பலரும் வாயை பிளந்து தான் பார்ப்பார்கள் என்று பேசி இருந்தார். இதே போல் படத்திற்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி இதனை ஒரு நூறு தடவை பார்த்து விட்டதாக கூறியிருந்தார். இப்படி ஒவ்வொருவரும் கங்குவா திரைப்படத்தை புகழ்ந்து சிலாகித்தனர்.

 

ஆனால் அதன் ரிசல்ட் என்னவோ மிக மோசமாகத்தான் வந்திருக்கிறது. மிக முக்கியமாக இந்த திரைப்படத்தில் கூறப்படுவது இரைச்சல் தான். எதற்கு எல்லாரும் இப்படி கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று பலரும் கடுப்பாகிறார்கள். திரையரங்குகளில் உட்காரவே காது வலிப்பதாக அவர்கள் கதறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

 

சிறுத்தை சிவா மீதும் பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இப்படி ஒரு மட்டமான படத்தை கொடுத்துவிட்டு அவர் எப்படி, நன்றாக இருப்பதாக பேசுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரும் எதுவும் நடக்காதது போல, பிரஸ் மீட்டில் அமெரிக்காவிலிருந்து படம் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். இது மட்டுமல்ல முந்தைய பேட்டிகளில் கங்குவா போல தன்னிடம் ஐந்து ஆறு கதைகள் இருப்பதாக கூறி சிலாகித்தார் சிறுத்தை சிவா.

 

தமிழ் தெலுங்கு என மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம், முதல் நாளில் மட்டும் 58 கோடியே 62 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஆனால் படத்திற்கு எழுந்திருக்கும் மோசமான விமர்சனங்களால் வரும் நாட்களில் கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வசூலை ஈட்டுமா என்பது சந்தேகம் தான் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்