சமீபத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக ஆதவ் அர்ஜூனா நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அவர் அரசியலுக்கு வராதது குறித்தும் விமர்சனம் செய்து பேசினார். விஜய் போல ரஜினிக்கு மனவலிமை இல்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆசைப்பட்டார். ஆனால் திமுகவின் பலவிதமான மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் விலகி விட்டார். இப்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் படங்களில் ரஜினி நடித்துக்கொண்டு இருக்கிறார் என்றும் ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த் குறித்து மட்டம் தட்டி பேசியிருந்தார்.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் தவெக கட்சிக்கு முடிவு கட்டுவோம். எங்கள் தலைவர் ரஜினியை பற்றி தவறான விமர்சனம் செய்த தவெக கட்சிக்கு சரியான பதிலடி தருவோம் என்று கூறி வருகின்றனர். மேலும் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை நயினார் நாகேந்திரன் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் என பலரும் ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜூனா தன்னை பற்றி பேசியற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் தனக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் தவெக கட்சிக்கு தேர்தலில் பதில் கிடைக்கும் என்றும் சூசகமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் மூத்த நடிகர் எஸ்வி சேகர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, ரஜினியை பத்தி தெரியுமா உங்களுக்கு? சொடக்கு போட்டு காமிச்சார். இந்த தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று பேசினார். அதுவும் எங்கே? முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த மேடையில். அது தெரியுமா?
அஜீத் லெவலுக்கு வர முடியுமா உங்க தலைவரு? ஐயா எங்களை எல்லாம் ரொம்பவும் பிரஷர் பண்றாங்க ஐயா. கலைஞர் முதலமைச்சரா இருக்கிற மேடையில் சொன்னார். ரஜினியும் சரி அஜீத்தும் சரி கொடநாட்டுல கையை கட்டிக்கிட்டு குளிர்ல நடுங்கிட்டு கேட்டுல நின்னுக்கிட்டு அம்மா எப்படியாவது என் படத்தை ரிலீஸ் பண்ணுங்கம்மான்னு பிச்சைக்காரன் மாதிரி கேக்கலே. அப்படிப்பட்ட தலைவரை வெச்சுக்கிட்டு நீங்க அடுத்தவரை பத்தி பேசறீங்க? என்று எஸ்வி சேகர் அதில் கோபமாக பேசியிருக்கிறார்.





