அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை விமர்சன ரீதியாக பலருக்கும் பல கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் அது படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதற்குக் காரணம், அதில் இடம்பெற்ற மாஸ் காட்சிகள் தான்.
படத்தில் எந்த ஒரு லாஜிக்கை பற்றியும் கவலைப்படாமல், முழுக்க முழுக்க ரசிகர்களுக்காகவே எடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் வரும் காட்சிகள் ஒவ்வொன்றையும் மாஸாக அமைத்து, பில்டப்புகளை ஏற்றிவிட்டு குதூலிக்க செய்திருக்கிறார். இது பலருக்கும் இங்கு பிடித்துப் போனதுதான் ஆச்சரியமான தகவல்.
குறிப்பாக குட் பேட் அக்லியில் இடம் பெற்ற ரெட்ரோ பாடல்கள், ஜெனரல் ஆடியன்ஸ்களையும் குஷி படுத்தின. படம் வெளியான 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பலரது பார்வையும் அஜித் குமாரின் 64வது திரைப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது. இதனை இயக்கப் போவது அந்த இயக்குனர் தான் என நாளுக்கு ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சிறுத்தை சிவாவில் ஆரம்பித்து விஷ்ணுவர்தன், நித்திலன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் குமார் கைகோர்ப்பதாக தகவல் வெளியானது. இதனை மைத்திரி மூவிஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக பலரும் கூறினார்கள். இது போக நடிகர் தனுஷும் அஜித்திடம் ஒன்லைனில் கதை கூறிய தகவல் உறுதியானது.
இப்படியான சூழலில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது மைத்ரி மூவிஸ் நிறுவனத்தின் கீழேயே தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி, அஜித் குமாரிடம் கதை கூறியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே தமிழில் தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார். துல்கர் சல்மானை வைத்து எடுத்த லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஹிட் அடித்தது. தற்போது சூர்யாவுடன் இணையப் போகும் நிலையில், அதற்கு முன்னதாகவே அஜித்துடன் பணியாற்றலாம் என்று சிலர் கூறி வருகிறார்கள்.





