- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து நடிகை சுவாசிகாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பு, மாமன் படத்தில் இவரது கேரக்டர்...

லப்பர் பந்து நடிகை சுவாசிகாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பு, மாமன் படத்தில் இவரது கேரக்டர் என்ன தெரியுமா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சுவாசிகா. தமிழிலும் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதற்கு காரணம், அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் அவருக்கு தரப்படவில்லை என்பதுதான்.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் சுவாசிகா, நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியின் அம்மாவாக, கெத்து தினேஷ் மனைவியாக யசோதா என்ற கேரக்டரில் சுவாசிகா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பல காட்சிகளில் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக தனது கணவன் பூமாலை, குடும்பத்தை கவனிக்காமல் கிரிக்கெட் விளையாட போவதும், அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் கடன் பிரச்னைகளும், ஒரு கட்டத்தில் தன் மகளின் காதலனும், தன் கணவனும் கிரிக்கெட் மைதானத்தில் சண்டையிடுவதை பார்த்து, கணவனை விட்டு பிரிந்து செல்வதும் என அவரது நடிப்பு அழுத்தமாக இருந்தது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் லப்பர் பந்து படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்த படத்தில் நடித்த வகையில் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் அவரது 45வது படத்தில் சுவாசிகா முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் திரிஷா, நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா ஆகியோரும் நடிக்கின்றனர். நட்டி, யோகிபாபு போன்றவர்களும் நடிக்கும் சூர்யா 45 படப்பிடிப்பு, கோவையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். திருச்சியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். இதில் சூரிக்கு அக்காவாக சுவாசிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்