- Advertisement -
Homeபொழுதுபோக்குஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? பதிலை சொன்ன - நடிகை டாப்ஸி

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? பதிலை சொன்ன – நடிகை டாப்ஸி

- Advertisement -

உலகின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சென்டிற்கும் ஜூலை 12-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற நிச்சயதார்தத்திற்கு பிறகு கடந்த ஆறு மாதங்களாக இவர்களது திருமண விழா கொண்டாட்டம் நடைபெற்று வந்தது.

இவ்வேளையில் மும்பையில் இவர்களது திருமணம் சுமார் 5000 கோடி அளவிற்கு பிரம்மாண்டமாக செலவு செய்யப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு முந்தைய வைபவங்களும் திருமணத்திற்கு பிறகான கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த திருமண விழாவில் உலக தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், பிரபலங்கள் என பல தரப்பட்ட முக்கிய நபர்களும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்துள்ளனர்.

மும்பையில் உள்ள அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், ஜான் சீனா, தோனி ,மோடி என இந்தியா முழுவதும் இருந்து மட்டுமின்றி உலகம் முழுதும் இருந்து முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

அதோடு கலந்து கொண்ட அனைவருமே திருமண கொண்டாட்டத்திலும் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான டாப்ஸி கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த திருமண விழாவில் தான் கலந்து கொள்ளாதது குறித்து பேசிய அவர் கூறியதாவது : எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம் என்று நினைக்கிறேன்.

எனக்கோ அல்லது என் குடும்பத்திற்கோ கூட சிறிதாக அவர்கள் பழகி இருந்தால் மட்டுமே அந்த திருமண நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வேன். அப்படி எனக்கும் என் குடும்பத்திற்கும் அவர்களுடன் தொடர்பு கிடையாது எனவேதான் நான் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு செல்லவில்லை என்று டாப்ஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்